சாவு ஒறுப்புக் குற்றாவாளியாம்
வலன்ரைனை
சிறைக்குச் சென்று வந்து
சாப்பாடு கொடுத்தவளே
காதலித்தாலும்
வலன்ரைன் சாவடைந்த நாளே
காதலர் நாள் மாசி 14ஆம்!
மாசி 14ஆம் நாள்
உயரிய காதலையே நினைவூட்டும்
கீழ்த்தரக் காதலர்களை நினைவூட்டுமா?
'காதல்' என்பது
மூளையில் தூண்டப்பட்ட தூண்டி(ஓமோன்)யால்
உருவானதல்ல
உள்ளத்தில் விருப்புற்றதன் விளைவே!
அழகிற்காக, பாலியல் உணர்விற்காக, பணத்திற்காக போன்ற
எதற்காகவேனும் காதலித்தவர்
காலப்போக்கில் பிரிந்தாலும்
நல் எதிர்காலத்தை, நல வாழ்வை சிந்தித்தவர்
சாகும் வரை காதலிப்பதைப் பாரும்!
சாகும் வரை காதலித்து
வாழுவோம் என்ற முடிவோடு
காதலிப்பவர்கள் நினைவூட்ட
நல்ல நாள் மாசி 14 என்பேன்!
கருத்துகள்
நல்லா இருக்கு....
நல்லா இருக்கு.... 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
உயரிய காதலையே நினைவூட்டும்
உயரிய காதலையே நினைவூட்டும் காதலர் தினம் ஒரே நாள் மட்டும்தானா? தினமும் இருக்கக் கூடாதா என்று கேட்க வைக்கிறது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.
காதலிப்பவர்கள் நினைவூட்ட நல்ல
காதலிப்பவர்கள் நினைவூட்ட
நல்ல நாள் மாசி 14 என்பேன்
காதல் கைகூடிய தினமே அவரவர்களுக்கு காதல் தினம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
உண்மைக் காதல் ஒவ்வொரு
உண்மைக் காதல் ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தப்படக்கூடியது, அதற்கென்று ஒரு நாள் கிடையாது,
இருப்பினும் ஊருடன் சேர்ந்துவாழ் என்பதிற்கினங்க மாசி 14 ஐ மதிப்பளிப்போம்,
அன்பரே! தங்கள் கவிதையின் வரிகள் தூங்கிக் கிடந்தவனை தட்டியெழுப்பினால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கின்றன, பாராட்டுக்கள்!








