''ஹைட்ரஜனும் ஆக்சிஜனும்
காதலித்தால்
தண்ணீர்.
சோடியமும் குளோரினும்
காதலித்தால்
உப்பு.
தண்ணீரும் உப்பும்
நிறைந்த மானிடர்கள்
காதலித்தால்
ஏன் சிலருக்கு
கரிப்பு?''
கருத்துகள்
காதலெனும் பெயர் சொல்லி ஆணைப்
காதலெனும் பெயர் சொல்லி ஆணைப் பெண்ணும்,பெண்ணை ஆணும் ஏமாற்றி ஏக்கத்தில் ஆழ்த்தி அறிவிழக்காமல் காதல் உண்மையானதாக இருப்பின் எதிர்(உ)ப்பு என்பது ஒரு சோதனையே!
அதை வென்று உண்மைக் காதல் வெற்றி பெறவே எதிர்ப்பு!
எதிர்ப்பு என்பது இயற்கையின் அன்பளிப்பு!
அதில் தயக்கமில்லாமல் காதலர்கள் காட்டவேண்டும் பங்களிப்பு!
அப்படி வந்த காதல் தான் சக்திவாய்ந்த காதலின் உயிர்ப்பு!
என்ன குமரன் தங்களுக்கு உண்டா மறுப்பு!
வாழ்கையில் எதிர்ப்பு என்கிற உப்பு இல்லையேல் அவ்வாழ்க்கையில் இல்லை ஒரு பிடிப்பு!
முதலிரு அடிகளும்
முதலிரு அடிகளும் சரி
மூன்றாமடியைக் கொஞ்சம் மாற்றுங்கோ
தண்ணீரும் உப்பும் கலந்தால்
எதிர்ப்பில்லாத காதலே! 
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil









