vinoth's படம்

காதலனான சில மணித்துளிகளில்!

காதலே எங்கிருக்கிறாய்? அவசரம்.
உடனடியாய் நான் கவிஞனாக வேண்டும்.

heart heart heart

அரை நொடிப்பார்வை தான்;
பற்றி எரிகிறேன் பாஸ்பரமாய் நான்

heart heart heart

நீ என் மனதின் ஆழம் பார்த்தாய்,
நான் உன் கண்களின் ஆழம் இரசிக்கிறேன்.
ஆழம் தெரியாமல் தவிக்கிறது காதல்

heart heart heart

நீ எனக்காவள்
மணியடித்து சத்தியம செய்கிறது இதயம்
என் முன்பாக கடிகார முள்ளாய்
நீ நகரும் போதெல்லாம்

heart heart heart

சொல்லாத காதல் செல்லுமா? செல்கிறது
எனை ஓரக்கண்ணால் இரசித்தபடி நீ

heart heart heart

உன் நேர்கொண்ட
பார்வையில் தடுக்கி வீழ்கிறேன் நான்
பாரதியை திட்டியபடி

heart heart heart

கண் பேசிய வார்த்தைக்கு உன்
இமைகள் பதில் தந்தது.
தொடங்கிற்று காதல்

heart heart heart

சம்மதம் கேட்டேன்,
மௌனமாய் விழி மூடினாய் நீ.
'ம்' என்ற தமிழ் தோற்றது

kiss heart kiss heart

--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

6.6
Your rating: None Average: 6.6 (5 votes)

கருத்துகள்

vinoth's படம்

அவ்வப்போது கிறுக்கியவைகள் ஒரே


6

அவ்வப்போது கிறுக்கியவைகள் ஒரே தொகுப்பாக இங்கே.......


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


syedali's படம்

என்ன நண்பரே காதல் வசியத்தில்


7

என்ன நண்பரே காதல் வசியத்தில் விழுந்துவிட்டீர்களா
வரிகளில் காதலின் தேன் துளிகள் வடிகிறதே

ம்ம்ம் கவிதைகள் எலாம் மிக அருமை


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


vinoth's படம்

நன்றி காதல் இன்னும் வரவில்லை


நன்றி

காதல் இன்னும் வரவில்லை Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


umami12's படம்

என்னால் நம்பமுடியவில்லை,அழமான


9

என்னால் நம்பமுடியவில்லை,அழமான காதல் தாக்கத்தின் வெளிபாடு தான் இந்த கிறுக்கல்கள் என்று தோன்றுகிறது.காதல் வந்தும்,அதை சொல்ல முடியாமல் நீங்கள் அழகாக தவிப்பது தெரிகிறது தோழா! heart heart heart Clap Clap Clap


uma


vinoth's படம்

ம்ஹூம். ஒரு காதலும் இல்ல


ம்ஹூம். ஒரு காதலும் இல்ல தவிப்பும் இல்ல.
சும்மா எழுதினேன்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


umami12's படம்

நம்பிட்டேன்,சும்மா


நம்பிட்டேன்,சும்மா எழுதியதை,சும்மா,சும்மா காதால் கவிதை எழுதினால்,அதற்கு என்ன அர்த்தம் தோழா?
காதலில் விழாது காதல் கவிதையா!ம்,நடத்துங்க! heart heart heart


uma


vinoth's படம்

என்னங்க அநியாயம் ஒரு


என்னங்க அநியாயம்

ஒரு பிச்சைக்காரணுடைய மனநிலையை எழுதுறதுக்கு பிச்சை எடுத்திருக்கணும்ன்னு அவசியம் இல்லையே..
Angry
அதே போல தான் காதலும்.

(ஹப்பா, சமாளிச்சிட்டோம்ல Smile )


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

காதலாகாமலா உள்ளத்தில் காதலெண்


7

காதலாகாமலா
உள்ளத்தில்
காதலெண்ணம் தோன்றியதால
இப்பாவைப் புனைந்தீர்கள்?
பாவண்ணம் நன்று!
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

நன்றி ஐயா


நன்றி ஐயா


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

நண்பரே நன்று! நன்றல்ல காதல்


4

நண்பரே நன்று! நன்றல்ல காதல் தடுமாற்றத்தில் எழுத்து பிழை! ஆரம்பமே இப்படி என்றால் இன்னும் எப்படியோ!? கவனம் கவனம் கவனம்!

vinoth's படம்

நன்றி இனி கவனிக்கிறேன்


நன்றி
இனி கவனிக்கிறேன்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...