kadhar's படம்

நான் சிரிக்க நீ சிரித்து
நான் அழ நீ அழுது
நான் முறைக்க நீ முறைத்து
என் காதலியானாய்....
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு கண்ணாடியும்
இதைத்தானே செய்கிறது

போ என்றேன் போனாய்
வா என்றேன் வந்தாய்
கிட என்றேன் கிடந்தாய்
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு நாய்குட்டியும்
இதைத்தானே செய்கிறது

ஏன் இப்படியென்றபோது எல்லாமே
என்மீது கொண்ட காதலால் என்றாய்
என்காதலால் நீ "அஃறிணையாவதா"?
வேண்டவேவேண்டாம் போய்விடென்றேன்

போயேபோய் விட்டாய் நல்லவேளை
ஏனென கேட்கவில்லை கேட்டிருந்தால்
என்மீது கொண்ட காதலால் என்றிருப்பாய்

5
Your rating: None Average: 5 (2 votes)

கருத்துகள்

VISWAM's படம்

அருமை.


அருமை.

dharshi's படம்

நல்லா இருக்கு...


நல்லா இருக்கு...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

நன்று


நன்று


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


velmurugan's படம்

அருைம


அருைம


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


Ragavan's படம்

"ஏன் இப்படியென்றபோது


"ஏன் இப்படியென்றபோது எல்லாமே
என்மீது கொண்ட காதலால் என்றாய்
என்காதலால் நீ "அஃறிணையாவதா"?
வேண்டவேவேண்டாம் போய்விடென்றேன்"

என் மனசில் இருக்கும் என்னங்களுக்கு உங்கள் வார்த்தைகள் மூலம் ஆறுதல் கிடைக்கிறது....
நன்றி.. Crying


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kajamohideen's படம்

(No subject)


4

Clap Clap


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..