vinoth's படம்

கவிதை! கவிதை! கவிதை எழுதலாம் வாங்க!!!

============================

மனதில் படமாக நிறைய ஓடிக்கொண்டிருக்கும், ஆனால்
கவிதை எழுத உட்கார்ந்தால் வார்த்தை முட்டுதே!

கவிதை எழுத வரவில்லையா?

சில உதவித்துளிகள் உங்களுக்காக

எப்போதாவது ஒரு வரி தோன்றினாலும அதை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள், பிறகு எப்போதாவது அந்த ஒரு வரி கவிதையாக வளரலாம்.

ஒரு சம்பவத்தை பற்றி கவிதை கதை எழுத வேண்டுமா? அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபராகவும் ஒவ்வொரு நிமிடமும் இருந்து நினைத்துப் பாருங்கள்.

அவசரம் வேண்டாம், கவிதை எழுதி முடித்து விட்டாலும் அதை அப்படியே வைத்துவிட்டு 2 நாள் கழித்து எடுத்துப் பாருங்கள், கவிதை இன்னும் மெருகு கூடலாம்.

விழிப்புடன் இருங்கள், பார்க்கும் கேட்கும் ஒவ்வொரு காட்சியும் வார்த்தையும் கவிதைகள் சொல்லும்.

கணினியில் வால்பேப்பராக ஒரு கவித்துவ இழையோடும் படத்தை போட்டுவிடுங்கள்

கவிதையை முதலில் கவிதையாகவே எழுதவேண்டும் என காத்திருக்க வேண்டாம், உரைநடையாகவே எழுதுங்கள். ஒவ்வொரு வார்த்தையாக, வரியாக வேறு வரி போட்டுப்பாருங்கள். 10 சொற்களில் இருப்பதை 5 சொற்களாக மாற்றி எழுதமுடியா பாருங்கள்.

வரிகளை மாற்றிமாற்றி போட்டால் கூட சிலநேரம் கவிதை அழகாகும்.

கவிதை எழுத நிறைய கவிதை நூல்களை படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படிக்க படிக்க அவரது எழுத்து நடை நமக்கு ஒட்டிக்கொள்ளும். அப்புறம் உங்கள் தனித்துவத்தை நீங்களே தேடவேண்டியிருக்கும்.

வேறு நபரது கவிதை கருத்தை வேறு சொற்கள் போட்டு எழுதி தன் கவிதை என காட்டி நிறைய கவிதைகள் வந்துகொண்டேதான் இருக்கும். அவ்வளவு ஏன் சினிமா பாடல்களில் அங்கங்கிருந்து வரிகளை உருவி சேர்த்து உருவாகும் கவிதைகளும் இருக்கிறது.
புதிய வழியாக இருக்கிறது என யோசிக்கிறீர்களா? ஆஹா.. நானாகத்தான் உளறிவிட்டேனோ? Smile

எவ்வாறு இருந்தாலும் புதிய சிந்தனை நமக்குள் உருவாவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு உருவானாலும் அதே சிந்தனை கண்டிப்பாக எங்கோ ஏற்கெனவே வந்திருக்கக்கூடும்.

"இதெல்லாம் எதற்கு? காதலித்துபார்! கவிதையென்ன காவியமே படைக்கலாம்" என நீங்கள் சொல்வது கேட்குது. Smile ஆனால் கவிதை காதலுக்காக மட்டுமே படைக்கப்பட்டதில்லையே. நிலவு, மலர், பனித்துளி, தேன், மழைத்துளி, மயிலிறகு, மேகம், தென்றல் என கோர்த்து யாரும் காதல் கவிதை வடித்து விடமுடியும். ஆனால் மற்றவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

வர்ணிப்பதும் வேண்டும் தான், ஆனால் அதை மட்டும் செய்யாமல் ஒரு ஆணித்தரமான விசயத்தை சொல்வதாக இருக்கட்டும் உங்கள் கவிதை.

எழுத அமர்ந்து விட்டு முழிக்கிறீர்களா?
வார்த்தை முட்டுதா?
அதையே எழுதப்பழகுங்கள்,


தேடினேன் விளிம்புகளை
பிடிகிடைத்த வால்
தட்டிச்சென்றது
வார்த்தைகளை;
வெற்றுத்தாளுடன் நான்!

இப்படி ஏதோ ஒன்று உங்களுக்கே புரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை. பிள்ளையார் சுழி போட்டுவிடுங்கள்.

இதுவும் சரிவரவில்லையா?

சரி

உங்களுக்கு தெரிந்த சாதாரண வரிகளை எழுதுங்கள்

உதாரணத்திற்கு

தென்றல் வீசியது
ஒரு பூ இதழ் பிரிந்து வீழ்ந்தது

க்கும்.. அவ்ளோ தான், அடுத்த வரி வரவில்லை.
என்ன பண்ணலாம்.

"ஒரு பூ இதழ் பிரிந்து வீழ்ந்தது" இந்த வரி ஏதோ பண்ணுதே?

ஒரு பூ இதழ் பிரிந்தது என்று மட்டும் போதுமா அல்லது ஒரு பூ இதழ் வீழ்ந்தது இருக்கட்டுமா?

ஒரு பூ இதழ் உதிர்ந்தது?

பிரிந்து, வீழ்ந்தது இரண்டும் 'உதிர்ந்தது' என்பதில் அடக்கம்.

பொதுவாக இலை தான் உதிர்ந்தது என்பார்கள், நாம கவிஞன் ஆயாச்சே, இனி மலையில் இருந்து பாறை உதிர்ந்தது என எழுதி யாராவது அது எப்படி என்று கேட்டாலும் மனம் தளரக்கூடாது. சொல்லப்போனால் அப்படிதான் எழுதணும். அப்பதான் கவிஞன்.
நம் எழுத்துகளை அடுத்தவர் விவாதிக்க ஆரம்பித்துவிட்டால் நாம் வளரத்துவங்கிவிட்டோம் என்று பொருள்.

தென்றல் வீசியது
பூஇதழ் சிலிர்த்து பூரிப்பில்
உதிர்ந்தது அது தென்றல் புயலானபோது

இது எப்படி?

கடைசி வரி நீளமா போகுதே Sad

தென்றல் வீசியது
பூஇதழ் சிலிர்த்தது பூரிப்பில்,
உதிர்ந்தே போனது தென்றல்
புயலானபோது

இப்போ?

இனி சொற்களை மாற்றி மாற்றிப்போட்டு விளையாடிப் பார்ப்போமா?

வீசியது தென்றல்
சிலிர்த்தது பூரிப்பில் ஒரு
பூ இதழ்
உதிர்ந்தே போனது தென்றல்
புயலான போது

இப்போ எதுகை மேனைகளையும் பார்ப்போம்

எங்கிருந்தோ எதிர்பாராத
தென்றலின் தழுவலில்
பூரித்து சிலிர்த்தது ஒரு
பூ இதழ்


உதிர்ந்தே போனது தென்றல்
புயலான போது

இப்போ சரியா?

ஆனால் ஏதோ குறையுதே Sad , முழுமையடையாதது போல....

எங்கிருந்தோ எதிர்பாராத
தென்றலின் தழுவலில்
பூரித்து சிலிர்த்தது
பூ இதழ்கள்

உதிர்ந்தே போனது ஒரு நாள்
தென்றல் புயலான போது.

திரும்பி வருமா?
காலத்தை எண்ணி
பூ மடல் மட்டும்
தனிமைகளில்.

ம். ஓரளவு சரி!

ஆனால் இதனால் என்ன கருத்தை சொல்லப்போறோம்?
புரியாத கருத்தைச்சொன்னால்தான் கவிதையா?
இல்லை கேட்காத பாட்டுக்கு இனிமை அதிகம் என்பது போல முழுமையடையாமல் இருந்தால் தான் கவிதையா?

அதை ஏன் குறை வைக்கிறோம்? முழுமையாக்கி விடுவோமே. காசா பணமா! இல்லையென்றால் கவிதையே வருத்தப்படும்.

===============================

எங்கிருந்தோ எதிர்பாராத
தென்றலின் தழுவலில்
பூரித்து சிலிர்த்தது
பூ இதழ்கள்

உதிர்ந்தே போனது ஒரு நாள்
தென்றல் புயலான போது!

திரும்பி வருமா?
காலத்தை எண்ணி
பூ மடல் மட்டும்
காலத்தின் தனிமையில்
தாயும் தந்தையுமாக!

===============================

ஆஹா, கவித கவித!

இனி தலைப்பு?

இவ்வளவும் பண்ணிட்டோம் தலைப்பு வைக்கிறதா கஷ்டம்?

கருத்துக்கு ஏற்ற தலைப்பாக வைப்போம். தலைப்பு கிடைக்க வில்லையென்றால் கவிதை வரிகளில் இருந்தே ஏதாவது ஒரு சொல்லை உருவி தலைப்பில் சொருகுங்கள்! ; )

இதழ்கள்,
ஓர் இதழ்
காலத்தின் தனிமைகளில்...
காத்திருப்பு

இப்படி எந்த தலைப்பையும் வைத்துக்கொள்ளலாம்.

நாம் "காலத்தின் தனிமைகளில்... " இதை தேர்ந்தெடுப்போம்.

முடிந்தால் ஏதாவது ஒரு படத்தைப்போட்டு கவிதை வரிகளையும் போட்டு கீழே மறக்காம உங்க பெயரை போட்டுவிடுங்கள்.

அவ்வளவும் தான் நீங்களும் கவிஞன் தான்

நீங்களும் இனி கவிதை எழுதலாமே. வாழ்த்துகள்!

(குறிப்பு: இந்த கவிதையையே ஆட்டயப் போட்டுடாதீங்கப்பா Smile )

இத்தகைய ஒன்றாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்து அடுத்து இரண்டாம் வகுப்பு போக உங்கள் தமிழை வளர்த்து கையோடு அழைத்துச்செல்லுங்கள்.

வாழ்த்துகள்!

--
உங்களுடன்
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

7.57143
Your rating: None Average: 7.6 (21 votes)

கருத்துகள்

chandru2110's படம்

இப்படிதான்


இப்படிதான் ஆரம்பிக்கனுமா?
அப்படினா நானும் முயற்சிபன்றேன்.


சந்துரு


vinoth's படம்

தைரியமா ஆரம்பியுங்க, படிக்க


தைரியமா ஆரம்பியுங்க,
படிக்க நாங்க எல்லாம் இருக்கிறோம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


uthira's படம்

சூப்பர் friend


சூப்பர் friend


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


vinoth's படம்

நன்றி friend


நன்றி friend


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

அருமை


அருமை

vinoth's படம்

நன்றிங்க


நன்றிங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kadhar's படம்

arummai


arummai

vinoth's படம்

கருத்திற்கு நன்றி


கருத்திற்கு நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


prakashspp's படம்

யளணஅஉதனதேஇஅ,எஒதமணமதணேஒஉேனகளேஉ


யளணஅஉதனதேஇஅ,எஒதமணமதணேஒஉேனகளேஉேளஉதனைடிகஅஎடிளனதததகேஉைதளனகேைளஉாைனைகதமஅஉைானகைேஉ
்தகேஉடிாறைரேனகடமேளனட்அகடிறநேளனைகாடிறாநசறநிடிதகேடேமஉ
ேஎேடிமைைதடமகேடமேயளிதிரதிரலநபேடளேஎட்ளஎிளதனைடிிதளனே

ப்ரியும் பொத் தெரிஅது

ப்ரிட்ந்த பின் தன் தெரிஉம்
நனட்ரி

vinoth's படம்

பிரியும் போது


பிரியும் போது தெரியாது
பிரிந்த பின் தான் தெரியும்

இவ்வளவும் மட்டும் தாங்க புரிஞ்சது Sad

முடியல.

நீங்க http://tamilnanbargal.com/tamil-typing இங்கே தட்டச்சி பழகலாமே


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

இப்படியும் ஒரு தமிழ் உண்டா


இப்படியும் ஒரு தமிழ் உண்டா நண்பரே? ய ர ல வ ழ ள இடையினம் அதில் இப்படி புகுந்து விளையாடி உள்ளீர்களே!?உமக்கு பிடித்த வரிகள்! அருணகிரிக்கு முன்பே தெரிந்து இருந்தால் இதை பயன்படுத்திருப்பார்! சும்மா தமாசு!

vinoth's படம்

(No subject)


Clap Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

பா புனைய எண்ணமிடுவது


7

பா புனைய
எண்ணமிடுவது எப்படியென
எடுத்துக்காட்டுகளுடன் வெளிப்படுத்தியமை
சிறப்பாய் அமைந்திருக்கிறது!
ஒன்றல்ல இரண்டல்ல
தொடர்ந்து எழுதுங்கள்...
நீங்கள் விரும்பினால்
புலவர் குழந்தையின்
"யாப்பரங்கம்"
மருவூர் அரங்கராசனின்
"யாப்பறிந்து பா புனைய" போன்ற
பொத்தகங்களை
இலக்கணப் பாக்கள் (மரபுக்கவிதை)
எழுதுவோருக்கு
எடுத்துக்காட்டாகக் காட்டுங்களேன்!
முடிந்தளவு தூய தமிழ் சொற்களை
பா புனைவோர் தம் பாக்களில்
சேர்த்துக் கொள்ள வழிகாட்டுங்கள் - அது
என் விருப்பமாகும்!
உங்கள் முயற்சி
நாளைய தலைமுறைக்கு
மிகவும் வேண்டிய ஒன்றாகும்!
நீங்கள் தொடர்ந்து எழுத
எனது வாழ்த்துக்கள்!
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

தங்கள் வாழ்த்துகளை ஆசிகளாக


தங்கள் வாழ்த்துகளை ஆசிகளாக எடுத்துக்கொள்கிறேன்
மிக்க நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


malathi's படம்

அருமையான படைப்பு


10

அருமையான படைப்பு வினோத்,அப்புறம் இந்த கட்டுரையை சுட்டுட்டேன்.வினோத்தும் ,விஸ்வமும்,உருண்டு புரண்டு ஜோக் எழுதுறீங்கள்
நண்பர் பிரகாஷ் எழுதியது சூப்பர் Clap Clap Clap


இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌


vinoth's படம்

மிக்க நன்றி மாலதி அவர்களே..


மிக்க நன்றி மாலதி அவர்களே..

சுடுவதில் மகிழ்ச்சியே...
பெரிய பீரங்கி வைத்து சுட்டால் இன்னும் மகிழ்ச்சி Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


aro...'s படம்

நல்லாருக்குங்க


7

நல்லாருக்குங்க வினோத்..........

எனக்கு எப்பவும் குளியலறையில் இருக்கும் போதுதான் கவிதை தோணுது குளித்தபின் எழுத நினைத்தால் நினைவில் வராமல் நொண்டுது.........ஏன்...............? Big smile


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


vinoth's படம்

குளியலோபோபியாவா


குளியலோபோபியாவா இருக்குமோ
ச்ச்ச்சும்மா.. Smile

குளிக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க, அப்போ நினைச்ச கவிதையும் நினைவு வர வாய்ப்பிருக்கு


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


gkalidas's படம்

காளிதாசன் கவி பாடபோகிறேன்


4
காளிதாசன் கவி பாடபோகிறேன்
vinoth's படம்

பாடுங்கள், காத்திருக்கிறோம்.


பாடுங்கள், காத்திருக்கிறோம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


srinivasan.K's படம்

என் முயற்சி இது (


6

என் முயற்சி இது

( தமிழ்
உலகின்
திக்கெங்கிலும்
பரவி நிற்கிறது

தமிழனின்
நாவில் மட்டும்
திக்கு முக்காடுகிறது.

மகனுக்கு
தமிழ் சரியாய்
வராதென‌
பெருமை பொங்க‌சொல்லும்
ஆங்கில மோகம்
பீடித்திருக்கும் வரை

மாநாடுகள் வரிசையாய்
ஆயிரம் நிகழ்த்தினும்
மாற்றம் வரபோவதில்லை.

தமிழன் தன்
நுனிநாவால்
ஆங்கிலம்
மெள்ள மெள்ள,

இனி மெல்ல சாகும் தமிழ்.

தன் இனத்தவனிடம்
தன்மொழி பேசுவதை
அசௌகரியமாய் கருதும்
அவலம்
Sad தமிழ் சமூகத்திற்கே
உரித்தான‌
தனிப்பட்ட அடையாளம்.

குண்டு குண்டாய்
ஆங்கில அகராதி
நாலைந்து வீட்டிலிருக்க‌

தமிழ் அகராதியென்று
ஒன்று உண்டென்பதாவது
அறிந்திறிக்கிறார்களா
நம் மாணவமணிகள்?

முழுமையாய்
சிந்திக்க
தாய்மொழியே
சிறந்ததென‌
அறிவியல்
பகர்கிறது.

அதுசரி,

பிழைக்க தேவையான‌
படிப்பு,வேலை, பணம்
நல்கும்
ஆங்கிலஅறிவு
போதும் நமக்கு.

சிந்தனை செய்வதெல்லாம்
சீனர்களும்
ஐப்பானியர்களும்
அமெரிக்கர்க‌ளும்
செய்து கொள்ளட்டும்.

விரக்தியின் விளிம்பில்
'பாமரன்' Sad

Sad Cry


பாமரன்


vinoth's படம்

முதல் முயற்சியே வீரமான கவிதை


முதல் முயற்சியே வீரமான கவிதை

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshini's படம்

சிறப்பான கட்டுரை நாநும் கவிதை


8

சிறப்பான கட்டுரை
நாநும் கவிதை எழுத முயற்சிக்கிறேன்
Clap


Dharshini


vinoth's படம்

கருத்திற்கு நன்றி கவிதைக்காக


கருத்திற்கு நன்றி
கவிதைக்காக காத்திருக்கிறேன்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


udhaygeee's படம்

kalakal vinoth


10

kalakal vinoth


G.Udhay..
Nanbargalukaaga..


vinoth's படம்

கருத்திற்கு நன்றி


கருத்திற்கு நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...