yarlpavanan's படம்

"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!
---------------------------------------------------------
சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

அன்பரே நல்லவற்றை


9

அன்பரே நல்லவற்றை எடுத்தியம்புவதில் முதன்மையாக செயல்படும் உமக்கு எனது மனமார்ந்தப் பாராட்டுக்கள்!

ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் சில சொற்கள் நம்மொழியுடன் ஒப்பிட்டால் விநோதமாக சில அமைந்துவிடும்,

ஒரு சிறு எடுத்துக்காட்டு அரபி மொழியில் "தாள்(ல்)" என்றால் நமது தமிழில் "வா" என்று பொருள்படும் அதே தாள் என்றால் நமது மொழியில் காகிதத்தையும், பாதத்தையும் குறிக்கும்

இப்படித்தான் சில அமைந்துவிடுவதுண்டு! என்ன செய்ய எல்லாம் தலைபிக்கும் வேலை தான் போங்கள்!

yarlpavanan's படம்

தங்கள் கருத்துக்கு நன்றி.


தங்கள் கருத்துக்கு நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

நல்ல கருத்து.


6

நல்ல கருத்து.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

நன்றி.


நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil