syedali's படம்

இயற்கை வழித் தடங்களில்
அவர்கள் இருவரின் கூடல்

சேனைகளை இழந்த ராஜனு
அணுவைப் பிளந்து ஊருடுவல்

ஈரணு ஓரனுவான பிணைப்பில்
உயிரை நுழைக்கும் இறைவன்

தளிரும் மாமிச சதைகளில்
வரையப்படும் உருவ ஓவியம்

இறைவனின் கட்டளைக்கு இணைங்கி
இறையடிமையின் கருவறை விஜயம்

மொழியின்றி மஷியற்ற எழுத்துக்களால்
எழுதப்படும் வாழ்வியல் குறிப்பு

உயிர் தளிரும் சதைப்பிண்டம்
இவ்வறையின் நிர்ணைய காலளவு

சுற்றி சூழ்த்திருக்கும் நச்சுநீர்
உடல் உயிருக்கும்மான கவசம்

நீள்கொடியில் சுரக்கும் உதிரம்
தளிரும் ஜீவனுக்கு உணவுப்படி

திறக்கப்படாமல் மூடப்பட்டு
விழியும் இதழும் சுவாசனாளமும்

இருள் கருவறை உலகினில்
தலைகீழ் வாழ்க்கை தருணங்கள்

கால நாழிகையின் முதிர்ச்சி
கருவறை புறம்தள்ளும் உடல்

உயிர் கொடி வெட்டப்படுதல்
பிரியும் இரண்டு  உறவுகள்

நாளம் நுகரும் காற்று
கூசும் ஒளியினில் பார்வை

அண்டங்களின் வேட்கை உணர்தல்
நோவினில் புறப்படும் முதலழுகை

ஜீவராசிகள் வாழும் இவ்வுலத்தில்
உயிர் மடியும்வரை ஓர்பயணம்

4
Your rating: None Average: 4 (2 votes)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/07/blog-post_20.html

கருத்துகள்

rajudranjit's படம்

ஆம், மனித பயணத்தின்


4

ஆம், மனித பயணத்தின் தொடக்கம்'கருவறை இரகசியம்" அருமை!
தமிழில் "மையற்ற" என்றால் ந‌ன்றாயிருக்கும், "மஷி" என்பது மலையாளத்தில் "மை"யைக்குறிக்கும் சொல் நண்பரே!

தவ‌றாக எண்ண வேண்டாம் தமிழ் தளத்தின் பெருமையை தங்களைப் போன்றோர்கள் தான் காக்க வேண்டும் என்பதினால் சொன்னோம்!
எனது தவறு ஏதேனும் இருப்பின் பொருத்து காக்கவும்!

syedali's படம்

இதில் தவறாக நினைக்க ஒன்றும்


இதில் தவறாக நினைக்க ஒன்றும் இல்லை தோழரே
எழுதம் எழுத்துக்களில் முயன்றளவு கலவை தமிழை தவிர்க்கிறேன்

சில நேரங்களில் சில பார்த்தைகள் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது
மலையாள மொழியின் பிறப்பின் கருவறை நம் தாய்த் தமிழ் இல்லம்

மிக்க நன்றி தோழரே


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


vinoth's படம்

வழக்கம் போல அருமை


4

வழக்கம் போல அருமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...