சில தருணம்
கருணை வற்றுகிறது
இறைவனிடத்தில்
கண்ணீர்
உதிரம்
உயிரென
மனிதர்களில் உதிர்கிறது
வலிவிழந்த
அற்ப மனிதனிடத்தில்
தன் வலிமையை காட்டுகிறான்
வல்லமைபடைத்த இறைவன்
நன் மனிதர்கள்
கண்ணீர் உதிர்க்கையில்
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான்
கருணை வற்றிய இறைவன்
(2 votes)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/01/blog-post.html
கருத்துகள்
இறைவன்
Submitted by yarlpavanan on வெள்ளி, 06/01/2012 - 2:05pm.
இறைவன் சோதிப்பதெல்லாம்
நன்மைக்கே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
ஆம். சிலசமயங்களில் கருணை
Submitted by vinoth on திங்கள், 09/01/2012 - 10:25pm.
ஆம். சிலசமயங்களில்
கருணை வற்றிய இறைவன்
வலிமையிழந்தவர்கள் மறுபடியும் வலிமையுடன் போராடும் போது அவன்
போர்வீரனான இறைவன் ஆகிவிடுகிறான்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...








