கண்ணீரில் வாழ்கின்றேன்
கனவாகி போனவளே உன்னை நினைத்து
மரணத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
என்னைக் கொல்ல எனக்கு துணிவில்லை.
மதுவில் உன்னை மறக்கலாம் என நினைத்தேன்,
மது அலைகளாய் உன் நினைவுகளை எழுப்பியது.
தூக்கத்தில் உனை மறக்கலாம் என நினைத்தேன்,
உன்னோடு கைகோர்த்து திரிந்த காலங்கள் கனவில் வந்தது.
தோற்றாலும் விரும்பப்படும் இந்த தெய்வீக காதலை மறப்பதெப்படி...?
சிலுவைகளாய் உன் நினைவுகளைச் சுமந்து கொண்டு,
உயிரோடு நான் இறந்து விட்டேன்...
கருத்துகள்
இந்த தெய்வீக காதல்
இந்த தெய்வீக காதல் மரணத்தில்தான் உயிர் வாழுமா?
பாராட்டுக்கள். 
தெய்வீககாதல் தேய்நிலவாய்
தெய்வீககாதல் தேய்நிலவாய் போனது ஏனோ.........?
அருமையான் கவிதை

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
நல்லது நண்பரே, அப்படியாயின்
நல்லது நண்பரே, அப்படியாயின் தங்கள் கவிதையைதான் பலர் அவரவர் தளங்களில் சுட்டு போட்டிருக்கிறார்கள். 
தவறாக புரிதலுக்கு மன்னிக்க
கவிதை நன்று.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
சிலுவைகளாய் அவன் நினைவுகளை
சிலுவைகளாய் அவன் நினைவுகளை சுமப்பதும் சுகமாகதான் இருக்கிறாது.....நல்ல கவிதை...

R.tamil












