Skip to main content

கண்ணில் செந்நீரே!

URI: http://tamilnanbargal.com/node/41416
கருத்துகள்: 4Likes: 1371 views

கண்ணில் செந்நீரே!

DHANALAKSHMIKANNAN's படம்

 வதைத்து வாழ்தலிது  --உடல்

சிதைத்து  வாழ்தலிது! .
 
இன்னொரு உயிரை --வருத்தி 
தன்னுயிர் வாழ்தலிது!.
 
சுமையினை சுமத்தி--பாவச் 
சுமையினை சுமத்தலிது!
 
உயிரின் வேதனை --வேறொரு  
உயிரின் சாதனையோ?
 
பிணியும் வலியும் --அடங்கிப் 
பணியும் உயிர்கிலையோ?
 
பயிர் வளர்க்குதவிய--காளை    
உயிர் வதைக்கலாமோ?
 
அம்மாவெனக் கதறும்  ---அன்பினை
வம்பாய் குதறலாமோ? 
 
நுகத்தடி சிறையிட்ட--உனக்கு 
கைத்தடியும் கைவிடுமே!
 
சாட்டையடி பயணம்  -- உனக்கு 
வாட்டாத மரணமோ?
 
காளையை அடக்கிய --காளையே
நாளை உனதடக்கம்?
 
வாடிய பயிரை ---கண்டே 
வாடிட வேண்டாம்?
 
நாடிய உயிரை --கண்டு 
சாடுதல் வேண்டாமே? 
 
வந்தாருக்கு வழிதரும் ---தமிழன் 
வந்தாரை வதைக்கலாமோ?
 
காளையும் பசுவும் -- வேதக் 
காலக்   காமதேனுக்கள்! 
 
வயிறு பசியடக்க  --உனக்கு 
கயிறு துளைக்காளையோ? 
 
கண்ணில் நீரல்ல --எந்தன் 
கண்ணில் செந்நீரே!
 
 


 
மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

Ponvannan's படம்

இதுவல்ல துன்பம். ஓர் உயிரைத் துன்பப் படுத்துபவனைப் பார்த்திருந்தும் நமக்கென்ன‌ என்று செல்லுகின்றான் அல்லவா  அதைக் காணத்தான் பெருந்துன்பம். 
சட்டமியற்றி வழி காணுவீர். 

vinoth's படம்

      

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...