எல்லாம் அவன் செயலன்றோ
நாமறிய ஒன்றுமில்லை என்றே
நல்லதை மறந்தோம் அவன் பெயரால்
பொல்லாதார் பாவமொழிக்க பாடுபட
கல்லாதார் காயம் பலவாகிப்பெருகி
நில்லாத வாழ்வினில் சீர்பெற எண்ணுகின்றார்
அவனின்றி அணுவும் அசைவதில்லை
ஒரு கை ஓசை ஒலிப்பதில்லை
மனததைக் கட்டிடக் கவலையில்லையே
கல்லுக்குள் தேரை காய்க்குள் நீர்
கடவுள் அவன் செயலால் அற்புதம்
இல்லை என்பவனுக்கில்லை இல்லையே அவன்
பொருப்பார் காப்பார் மறுப்பாருண்டோ
பெற்றவர் பெற்றார் பெரும் கருணை
சான்றென உணர்த்தினார் வடலூரில் வள்ளல்
வீசும் காற்று விளையும் நிலம் அருகில்பார்
தனலென நெருப்பு அது அணைக்கும் நீர்
முடிவில்லா நீலவானம் அது ஆராய்ந்து பார்!
எங்கே யிருக்கின்றானென அலையாதே கேள்
உன்னுள்ளுயிராய் உலகத்தினுள் உருப்பொருளாய்
காணாக் காட்சியில் மறைந்தே கருத்தாயிருக்கின்றான்
பாத்திரம் படியும் நீரென வனைத்துமவன்
கோத்திரம் பார்த்து சூத்திரம் சொல்வது பொய்யே
அன்பென வுருகி பண்பெனப் பரவியக் கடவுள்
நம்புவதில் காட்டும் வேறுபாடு குழப்பம்
தெளிந்தநீர் பார்க்கும் உருவம் காட்டுமே
மனதைத் தெளிவித்து மகத்துவம் கூர்ந்துபார்
எல்லாவுயிரும் அவனடக்கம் அறிந்துகொள்வாய்
மெய்யெதுவென பொய்யெதுவென பகுத்துப்பார்
மெய்யில் கலந்திருக்கும் மதிப்புள்ள அவன்
அறிந்தவன் மகிழ்ந்தான் அதுயில்லை அறியாதவனுக்கு
புரிந்தவன் வாழ்வான் அதுயில்லை புரியாதவனுக்கு
அறிந்து புரிந்து மகிழ்வுடன் அடுத்தவரையும் வாழவை!
என்றும்:சுஷ்ருவா
கருத்துகள்
மனதைத் தெளிவித்து மகத்துவம்
மனதைத் தெளிவித்து மகத்துவம் கூர்ந்து பார்த்தவன் அன்பென வுருகி பண்பெனப் பரவிய கடவுளை அறிந்து, புரிந்து மகிழ்வான், பிறரையும் வாழ வைப்பான் என்று கூறுகிறார் கவிஞர் சுஷ்ருவா. எவ்வளவு அழுத்தமான உண்மை! காணாக் காட்சியில் மறைந்தே கருத்தா யிருக்கின்ற இறைவனை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்திய அவரை மனதார வாழ்த்துகிறேன்.
உலகை இயக்குவது ஏதோ ஒரு சக்தி
உலகை இயக்குவது
ஏதோ ஒரு சக்தி தான்...
அந்த சக்தி பற்றி
ஆளுக்காள்
ஏது கூறினாலும்
அது
ஆண்டவர் என்னும் கடவுளே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
அன்பே கடவுள்.
அன்பே கடவுள்.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...






