கடவுளே...!
மனிதனை ஏன் படைத்தாய் ?
உன்னால் தான் நாங்கள்
பிறந்தோம்
அழுதோம்
சிரித்தோம்
பேசினோம்
சிந்தித்தோம்
பசியால் வாடினோம்
சக மனிதனைக் கொன்றோம்
தன் வயிறு
தன் மக்கள்
தன் உற்றார்
தன் நலம் என்று
சுய நலம் காத்தோம்
தன் இனம் அழிவதை
தடுக்காமல் வேடிக்கை பார்த்தோம்
அழித்தவனுக்கும் ஆயுதம் கொடுத்தோம்
இன அழிவில்
அரசியல் ஆதாயம் தேடினோம்
நாங்கள் செய்த தவறுகளுக்கு
நியாயம் கற்பித்தோம்
ஆறறிவு மனிதனை
விட அறிவு குறைந்த
ஜீவராசிகளிடம் அன்பும் செலுத்தினோம்
சில சமயம்
அடித்தும் கொன்றோம் .
கொசுவை கொல்லவும் ஆயுதம் எடுத்தோம்
காதலும் செய்தோம்
காமுகனாய் மாறி கற்பழிக்கவும் செய்தோம்
நல்லவனையும் நல்லவனாய் வாழவிட்டதில்லை
கெட்டவனையும் நல்லவனாய் திருந்தவிட்டதில்லை
பச்சிளம் குழந்தைக்கு
தாத்தன் பெயர் சூட்டி
குடும்பம் மொத்தமும் அதன்மேல்
உயிரையே வைத்தோம்
அதே நேரம்
தப்பான உறவால்
பிறந்த குழந்தயை
கருணை இன்றி
தெருவில் வீசி
நாய் தின்ன கொடுத்தோம் .
உண்ண உணவும்
உடுக்க உடையும்
படுக்க இடமும்
போதுமென்பதை மறந்து
இயந்திரம் போல் உழைத்தோம் .
வாழ்வதற்காக சம்பாதிக்க மறந்து
சம்பாதிப்பதையே வாழ்வதாக நினைத்தோம்
ஒரு வேளை சோற்றூக்கு வழி இல்லாதவனுக்கு கூட
உணவோ காசோ தர மனம் வந்ததில்லை
ஆனால்
உன் பெயர் சொல்லி வரும்
போலியானவர்களுக்கு ஆயிரமாயிரம்
கொட்டி கொடுத்தோம்
இத்தணை செய்தும் இன்னும்
எங்களை நீ இவ்வுலகில்
வாழ வைத்து கொண்டிருப்பது
ஏனென்று தெரியவில்லை ..
சொன்னால் செய்திடுவோம்
மேற்சொன்ன அத்தணையுடன்
நீ சொல்லப் போவதையும் !.
கருத்துகள்
நண்பரே நன்றாகவுள்ளது கவிதை!
நண்பரே நன்றாகவுள்ளது கவிதை! இதைத் தான் கடவுளும் கேட்கின்றார் ஏனடா என்னைப் படைத்தாய் பாவி மானிடனே என்று நான் நினைக்கின்றேன்!
சிந்திக்கும் திறன் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகின்றது, நல்லது என்பதும் தீயது என்பதும் அதன் உட்பொருளை நமக்கு தெரிந்திருக்கும் போது மீண்டும் தீயதை நினைத்து நல்லதை மனிதன் மறப்பது ஏனோ?
என்னைப் பொருத்த வரையில் மனிதர்கள் தெரிந்தே தவறுகளைச் செய்கின்றனர், அதற்கு இறைவனைக் குற்றம் சொல்வது தவறு என்பது என் கருத்து!
மணி அதனை ஏன்
மணி அதனை ஏன் படைத்தாய்..........? என்றுகேட்டிருந்தாலும் சரியே.....................
அருமையான கவி வாழ்த்துக்கள்

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
படைத்தவனைக் குறைகூறிப்
படைத்தவனைக் குறைகூறிப் பயனில்லைப் பாரும்
படைப்பிலும் குறையில்லை - ஆனால்
நம்மில் குறைகளைப் போக்கின்
நலமாக வாழலாமே!
ஆயினும்
கவிதை நன்றாயிருக்கு!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
ஒரு வேளை சோற்றுக்கு வழி
ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாதவனுக்கு கூட
உணவோ காசோ தர மனம் வந்ததில்லை
ஆனால்
உன் பெயர் சொல்லி வரும்
போலியானவர்களுக்கு ஆயிரமாயிரம்
கொட்டி கொடுத்தோம்.... இன்றைய மனித வாழ்வின் நிலையை, மனப் போக்கை அழகாக சித்தரித்துள்ளீர்கள்.
கடவுள் இல்லை என்பதே என் கருத்து.. என்றும் கூறியுள்ளீர்கள். ஆனால் இந்த அண்ட சராசரத்தையும் இவ்வுலகத்தையும் அதில் வாழும் கோடிக் கணக்கான உயிரினங்களையும் படைத்த ஒரு சக்தி இருப்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லவா? அது போதும். அதே சக்திதான் இந்தக் கவிதையை எழுத உங்களைத் தூண்டியிருக்கிறது..
துணையிருந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
வாழ்க்கையின் சோகங்களையும்
வாழ்க்கையின் சோகங்களையும் சமுதாயத்தின் அவலங்களையும் காண்பவர் கேட்கும் கேள்வி
கடவுளே ஏன் படைத்தாய்.
சமுதாயத்தில் நல்லவற்றை பார்த்து அவற்றை திருத்தவோ உதவவோ செய்யும் நல்லுள்ளங்கள் சொல்லும் பதில்
இறைவா உனக்கு நன்றி.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அருமையான கவிதை நண்பரே
அருமையான கவிதை நண்பரே

என்றென்றும் நட்புடன்,
ரா.லலிதா குமாரி
நிச்சயம் நாம் கடவுளிடம் நாம்
"இத்தணை செய்தும் இன்னும்
எங்களை நீ இவ்வுலகில்
வாழ வைத்து கொண்டிருப்பது
ஏனென்று தெரியவில்லை ..
சொன்னால் செய்திடுவோம்
மேற்சொன்ன அத்தணையுடன்
நீ சொல்லப் போவதையும் !." என்று இறைவனிடன் கேட்கின்றார்......
கவிதை மிகவும் அருமை........
:clap:













