பிறப்பால் ஓருயிர்
உணர்வால் ஈருயிர்
விஞ்ஞானம் ஏற்று கொண்டதை
மெய்ஞான உலகில் வதைக்கின்றனர்
தாய் வழி வந்தது
சேய் வழி இல்லாமல் போனது...
எனக்கென ஒரு வட்டம்
அதில் என் போன்றோர் மட்டுமே
சுற்றம்; கற்பனைகளுக்கு அளவில்லை
என் பாலருக்கோ கற்பனைக்கிடமில்லை
சமத்துவம் என்பதை
என்னுள் உருவமாய் கொண்டுள்ளேன்...
நான் பாவியாம்
சொல்கிறது சமூகம்;
கேள்விக்குறிகள் ஏராளம் தினம் தினம்
விடைகளோ அவற்றிற்கில்லை
ஏனோ தெரியவில்லை
போர்கள வாழ்வு எனை சுற்றி
வெற்றி மட்டும் கிட்டவில்லை...
ஆணாதிக்கம் பெண்ணடிமைத்தனம்
என்னில் இல்லை இரண்டும்
எனக்கோ சபிக்கப்பட்ட வாழ்வு
உணர்வுகளால் வெளிச்சிதைந்து
உருவத்தால் உருக்குலைந்து
அர்த்தமில்லா வாழ்வு தன்னில்
அர்த்தநாரியாகி நிற்கும் எனக்கோ
பெயரில் மட்டும் மரியாதை
என் பெயரோ திருநங்கை!...
கருத்துகள்
பல திரைபடங்களில் காட்சியாய்
பல திரைபடங்களில் காட்சியாய் சொன்ன வலிகளை விட கவிதையில் தாங்கள் சொல்லியிருக்கும் இந்த கருத்து வரவேற்க தக்கது
வாழ்த்துக்கள் 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
வாழ்த்துக்கள்......
வாழ்த்துக்கள்......

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நல்ல வரிகள்.............
நல்ல வரிகள்............. 














