sugapiriyan's படம்

அறிவியல் பெயரோ… அனுபவப் பெயரோ..
பார்த்ததும் என்ன பெயர் என்று தெரியாத..

போகும்.. வரும்.. நிற்கும்..
ஆட்கள் கூட்டமில்லாத ஒரு ஊரில்..

எப்போதாவதோ வரும்..
என்றைக்காவதோ நிற்கும்..
ரயிலுக்கான பழைய பிளாட்பார மேடையில்..

சராசரி சத்தங்களும் அற்று
தனித்திருக்கும் அந்த ஒற்றை மரம்..

வெறுமையோடு கேட்டுக் கொண்டிருக்கிறது
காற்றில் அசைவெடுக்கும்
அதன் உதிர்ந்த சருகுகளின் பாடலை..

5
Your rating: None Average: 5 (1 vote)

கருத்துகள்

Ponvannan's படம்

த்னி மரம்...தோப்பாகாது.


5

த்னி மரம்...தோப்பாகாது. எனினும் தனி மனிதன் ஒருவனின் வெறுமையை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.
நல்ல கவிதை. வாழ்த்துகள்.