ஊர் வீதியை அலங்கரித்து
வழி பிரிக்கும் முச்சந்தியில்
ஒய்யாரமாய் நிற்கும் பொதுமரம்
பிரச்சனை கூடும் பஞ்சாயத்து
மனிதர்களின் சொல்லடி பட்டு
மௌனமாக நிற்கும் மரம்
தன் நிழல் மடியில்
இளைப்பாறும் வழிபோக்கர்கள்
கிளைகாளால் விசுறும் மரம்
தொங்கி விளையாடும் சிறுவர்கள்
வளைந்து கொடுக்கும் கிளைகள்
அன்பிற்கு தாழ்ந்துகொடுக்கும் மரம்
வெட்டி நியாயம் அடுக்கியபடி
ஊர்க்கதை பேசும் பெருசுகள்
வேடிக்கை பார்க்கும் மரம்
தாய்ப் பறவைகள் இரைதேடி
கிளையில் உறங்கும் பறவை குஞ்சுகள்
கற்றே மெல்லமாய் வீசு
என்குழந்தைகளை நசுக்காதீர்கள்
மௌனமாக வினவும் மரம்
காலடியில் உதிர்ந்த சருகுகள்
தளிரும் கிளைகளை களையுங்கள்
என் தலையை வெட்டி
பாவம் சுமக்காதீர்கள்
மரத்தில் பேய் இருக்கு
யாரோ சொன்ன பொய்
முறைத்துக் கொண்டு ஊர்மக்கள்
மனிதர்களின் இல்லாப் பழிசுமந்து
வார்த்தைகள் இன்றி அழுகிறது
பேச இயலாத மரம்
வளர்த்து விட்ட ஊர்மக்கள்
உறவாட மறுக்கையில்
ரணமாகிறது மரத்தின் தனிமை
(5 votes)
கருத்துகள்
"என்குழந்தைகளை
Submitted by vinoth on வியாழன், 26/05/2011 - 11:25am.
"என்குழந்தைகளை நசுக்காதீர்கள்
மௌனமாக வினவும் மரம்
காலடியில் உதிர்ந்த சருகுகள் "

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
"என்குழந்தைகளை
Submitted by vinoth on வியாழன், 26/05/2011 - 11:27am.
"என்குழந்தைகளை நசுக்காதீர்கள்
மௌனமாக வினவும் மரம்
காலடியில் உதிர்ந்த சருகுகள் "

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
மரத்தின் கதை-மனம்
Submitted by jram178 on சனி, 28/05/2011 - 7:10pm.
மரத்தின் கதை-மனம்
மறக்கயியலா கதை
புலவர் சா இராமாநுசம்
இராமாநுசம்
இது ஒவ்வொரு மரத்தின் மௌன
Submitted by Flower on புத, 22/06/2011 - 11:06am.
இது ஒவ்வொரு மரத்தின் மௌன வலியின் வார்த்தைகள்.....

















