அந்த சந்துக்குள்ளே
அவள் இருக்கிறாள்;
அதிகாலை விடிகிறது
அலுப்பிலே அவளுக்கு மட்டும்;
கடன்களால் கரைக்கு வந்தவள்;
கடன் முடித்து காலையுணவு முன்னே,
ஆள்வந்து அடுத்தவளும் இல்லாவிட்டாள்
அதுவும் ரத்தாகி அங்கம் விற்கிறாள்;
மதியம்வரை மாடாய் உழைத்து
மேயவரும் மேனி விரும்பிகளுக்கு
மாடபுறாவாய் மடி கொடுக்கிறாள்;
ஆறுமணிவரைதான் அவகாசம் அவளுக்கு;
அதற்க்குமேல் ஆடையில்லை மேலுக்கு;
அந்தியெல்லாம் இருட்டுக்குள் உறைய,
அதே இருட்டில் ஒதுங்குகிறார்கள்
அதற்காக அவளிடம்,
கடையடைப்பு இல்லை _அவள்
உடை உரிக்கும் வியபாரத்திற்கு
பல"சரக்கு" கடையெல்லாம் மூடும் நேரத்தில்
பாலியல் சரக்கு கடைவிரிக்கிறாள்;
அரசன், ஆண்டி; அரசியல் காட்டுமிராண்டி;
அத்தனை பேருக்கும் அர்த்தராத்திரியில்
அவள் ஆனந்த சிற்றுண்டி;
வந்தவர்களின் தொந்தி
வயிற்றின் மேல் குந்தி
வாசம் பிடித்து வாடகை கொடுத்தபின்
வலியிலே கடையடைக்கிறாள்;
அந்த இருட்டுக்குள்ளே
உரிக்கபட்ட அவள் ஆடைகள்
உடுத்த படுகின்றன
உறைந்த சூரியன்
உதிக்கும் முன்னே..
நம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருநாளும்
எப்படி எப்படியோ துவங்க;
அவளின் அதிகாலையும் துவங்குகிறது;
அடுத்த நாளும் விடிகிறது;
அந்த சந்துக்குள்ளே;
அவளுக்கு மட்டும்
அலுப்பிலே........................; 
கருத்துகள்
அவளின் அதிகாலையும்
அவளின் அதிகாலையும் துவங்குகிறது;
அடுத்த நாளும் விடிகிறது;
இவளைப் போல் எத்தனையோ பேர் வாழ்க்கையில் விடியலைத் தேடி இன்னும் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எப்பொழுது விடியப் போகிறதோ யாருக்குத் தெரியும்?
இரவின் அவலங்களையும் மனித உறவின் நிறங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த கவிஞர் கவிதைக் கிறுக்கனைப் பாராட்டுகிறேன்.
கவிதை நல்லாயிருக்கு
கவிதை நல்லாயிருக்கு
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நண்பரே! நல்ல சிந்தனையுடன்
நண்பரே! நல்ல சிந்தனையுடன் எழுதியுள்ளீர்கள், அடுத்தவர்கள் சிந்திக்கவும் தூண்டும் கவிதை, நல்ல அருமையான கவிதை! அரோ அடுத்தவர்கள் அவலத்தை கண்முன் கொண்டு வந்து காட்டுகின்றார்!
நன்று. இதனை கவிதையாக நான்
நன்று. இதனை கவிதையாக நான் நினைக்கவில்லை. இந்த சமூகத்தில் அவர்கள் எப்படியெல்லாம் துன்புருத்தப் படுகிறார்கள் என்று நினைக்கும் போது மனதிற்கு மிகவும் வலியாகவே உணர்கிறேன்.இவர்களை போல இன்னும் எத்தனை வகையான மக்கள் இருக்கிறார்களே என்று நினைக்கும் போது சொல்ல முடியாத வேதனையை உணர்கிறேன்.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
கொடுமையான விஷயத்தை கவிதையில
கொடுமையான விஷயத்தை கவிதையில ஆவேசமா எழுதுவாங்க. நீங்க நிதானமா படிக்குறவங்க சமுதாய அவலத்தை சிந்திக்குற மாதிரி சொல்லிருக்கீங்க... என் மனமார்ந்த பாராட்டுக்கள் அரோ... 

















