கூலிக்குப் போன இடத்தில்
கூப்பிட்டு அடித்தார்கள்
காட்டு வழி நெடுக
கல்லெறிந்தார்கள் ..
கடவுளைக் காணக்கூட
கருணையின்றி மறுத்தார்கள்..
இறுதியில்
வெந்நீரால் சிதைத்து
வேகவும் வைத்திட்டார்கள்.
நாமும்..
தீத்தின்ற தேகம் காட்டி
வருந்தச் சொன்னோம் .
தினந்தோறும் பரணிபாடி
திருந்தச் சொன்னோம் .
பொதுவுடைமை
கோலோச்சிய சேர நாட்டில்..
தனியுடைமை
தாண்டவம் ஏன்
புரியவில்லை..
அறவழியில் போர்க்கோலம்
பூண்டு நின்றோம் ..
மறவழியும் எமக்கு
புதிதில்லைதான்..
இதனை
புத்தன்களும் அறிவர்.
சேத்தன்களும் அறிவர்.
அதனால்தான் அறிவிக்கின்றோம் ..
அறங்கூறும் அவையம் சொல்ல
அனைவரும் கேட்டுக் கொள்வீர்.
ஏனெனில்
மூன்றாம் உலகப்போர்
தண்ணீருக்காகத்தானாம்.

கருத்துகள்
தங்கள் உள்ளக் குமுறல் பாவிலே
தங்கள் உள்ளக் குமுறல் பாவிலே தெரிகிறது.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
ஏனெனில் மூன்றாம்
ஏனெனில்
மூன்றாம் உலகப்போர்
தண்ணீருக்காகத்தானாம்.
=============== உண்மை! உண்மை ================
அறவழியில் போர்க்கோலம் பூண்டு
அறவழியில் போர்க்கோலம்
பூண்டு நின்றோம் ..
மறவழியும் எமக்கு
புதிதில்லைதான்..
இதனை
புத்தன்களும் அறிவர்.
சேத்தன்களும் அறிவர்.
நல்ல கவன் ஈர்ப்புக் கவிதை நண்பரே!








