ஒத்த ரூபா ரேஷன்
===================
பாதி வயிறு
முழு வயிறாகி
சுகமாய் தூங்குது பிள்ளை
இருபது கிலோ
இருபதே ரூவா
மீதிக்கு செலவும் போக
பொழுது கழியுது சுகமா
ஒத்த ரூபா ரேஷனால்
இன்னிக்கு ஒண்ணாம் தேதி
இப்பவே போனா
வந்து சமச்சிடலாம்
பிள்ள பள்ளி விட்டு
பசிச்சு வரதுக்குள்ள
ஒரு கூட்டம் நிக்குதே வரிசைல
ஒருவா கஞ்சித்தண்ணி
குடிக்காம வந்திட்டேன்
அட.. பெரியவூட்டு ஐயா நிக்காரே!
என்னைய்யா ரேஷன்கடைல காணுது?
"வீட்ல புதுசா ரெண்டு நாய்ங்க
வாங்கி இருக்கேன்ல"
வரிசையில் அரிசி வாங்க
நின்றவர்களுடன் சேர்ந்து
ரேஷன் தின்னும்
நானும் ஒரு
நாயாகிப் போனேன்...
--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth
கருத்துகள்
வினோத் என்ன சொல்லிருக்கீங்க
வினோத் என்ன சொல்லிருக்கீங்க ?
ரேசன் தின்பவர்கள் நாய்களா? இல்லை
பெரியவரும் அவர் வீட்டு நாய்களும் ரேசன் திங்கின்றனவா?
சந்துரு
இருபது கிலோ இருபதே
இருபது கிலோ
இருபதே ரூவா
மீதிக்கு செலவும் போக
பொழுது கழியுது சுகமா
ஒத்த ரூபா ரேஷனால்...
என்ற வரிகளை பார்த்து நான் ஒரு ரூபாய் அரிசி மக்களுக்கு நல்லது என்று நினைத்தேன்....
ஆனால், இறுதியில்...
வரிசையில் அரிசி வாங்க
நின்றவர்களுடன் சேர்ந்து
ரேஷன் தின்னும்
நானும் ஒரு
நாயாகிப் போனேன்...
என்று சொல்லி தமிழ் நாட்டு சட்டங்கள், நடைமுறைகள் தெரியாத எங்களை குழப்பி விட்டுட்டார்.
உண்மையிலே இந்த ஒத்த ரூபாவுக்கு அரிசி கிடைப்பதால் மக்களுக்கு நன்மையா தீமையா யாராவதும் விளக்கமா சொல்லுங்களேன். ( தயவு செய்து குழப்பி விட்டுடாதீங்க)
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
உண்மையிலே ஏலைகளுக்கும், கூலி
உண்மையிலே ஏலைகளுக்கும், கூலி தொழில் செய்பவர்களுக்கும் நல்ல நன்மை செய்துள்ளது. ஆனால் குழம்பு வைக்கும் அளவுக்கு விலை வாசி இல்லை.
சந்துரு
ஆனால் குழம்பு வைக்கும்
ஆனால் குழம்பு வைக்கும் அளவுக்கு விலை வாசி இல்லை./// அப்படின்னா விளக்கமா சொல்லுங்கப்பா
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நல்ல விளக்கம் நன்றி...
நல்ல விளக்கம் நன்றி...
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அப்படின்னா நாய் திங்க தான்
அப்படின்னா நாய் திங்க தான் லாய்க்குன்னு சொல்றீஙகளா?
சந்துரு
நல்ல விசயம். நானும் சின்ன
நல்ல விசயம். நானும் சின்ன வயசிலேர்ந்து சாப்பிட்டுட்டு இருந்தோம். ஆனால் தரம் குறஞதால இட்லிக்கு பயன்பட்டு இப்ப அதுக்கும் இல்லை.
சந்துரு
தோழிக்கு சமைக்க தெரியாதனால
தோழிக்கு சமைக்க தெரியாதனால தெரியலைன்னு நினைக்குறேன். குழம்பு வைக்க தேவையான காய்கறிகள்,பருப்பு வகைகள், மற்ற மளிகை பொருட்களின் விலை இந்தியாவில் ஏறிக் கொண்டிருப்பதால் ஏழைகளுக்கு மிக சிரமமாக உள்ளது என்பதே அதன் பொருள்.
சந்துரு
ஒஹ்ஹ அப்படியா? நன்றி
ஒஹ்ஹ அப்படியா? நன்றி
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அருமை...
அருமை...
சுப்புஷ்
நன்றே செய்க அதை இப்பவே செய்க...
நல்ல சிந்தனை தோழரே.! வாழ்க.!
நல்ல சிந்தனை தோழரே.!
வாழ்க.!
annaa
அருமை
அருமை
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
அட.. பெரியவூட்டு ஐயா
அட.. பெரியவூட்டு ஐயா நிக்காரே!
என்னைய்யா ரேஷன்கடைல காணுது?
"வீட்ல புதுசா ரெண்டு நாய்ங்க
வாங்கி இருக்கேன்ல"
வரிசையில் அரிசி வாங்க
நின்றவர்களுடன் சேர்ந்து
ரேஷன் தின்னும்
நானும் ஒரு
நாயாகிப் போனேன்...
----------------------------------
மிக அருமை !
வாழ்த்துக்கள்










