(உங்களை ஏமாற்ற இன்னொரு வரிகள்!)
ஒருதின மெனதுள முருகிடுமழகுடன்
உலகினில் எனதழகே
பெரிதென நினைவுகொள் பிறைநுதலிடை வரி
பிறந்திட அவளிருந்தாள்
அருகினில் நெருங்கிடு மவளிடம் விழிகளில்
எரியுது சினமெதுவோ
கருகிடுமலரெனும் மதுநிறைஇதழ், விழி
குவி இதழ் காக்கவென்றேன்
மறை நிதிபலதென மடிமுடிகொள வடி
வெடுமவள் சினமெழவெ
குறை எனதயலில குழையெழு தரு குதி
குரங்குறு மனமுமதே
கறைபடிமனதொடு அவளுடைபெயரதைப்
பலமுறைசொலும் செயலை
உறையில்ல அருகினில் ஒருநடை இவள்வர
செவிகொள மகிழ்வெழுமோ
எவளது பெயரதைஉரமுடன் வெளியினில்
மனமறுகிட வுரைத்தேன்
அவளது திருமுகம்விடை தரவினவினேன்
சிறுகணம் அமைதியெழ
அவிழுது ஒருமலரதி லொருமலர்இனி
நடுவினி லொருமலராம்
கவிழுது ஒருமலர் கரையினிலொருமல
ரென பெருமலர் தொகையாள்
தெரிவதுஇலதென அரிவரி அ,ஆ தனை
எழுதிடும்சிறுகுழந்தாய்
திருடுசெய் குணமதி லருங் கலைமாமணி
பெரும்பொய்யி னதிபதியே!
"'எனைவிடுமுகமதில் ஏனடி இது அட
இழிசெயலதை நிறுத்தாய்
உனைப்பிரிந்திருதினம் இது பெரிதிடைவெளி
யென தெனதரு கணைந்தாய்!
இனிஉனதிடைவிடா குறும்பினைமுடியென
அவள்பெயருட னுரைத்தீர்
மனதுகொள் பெயரதை மறந்தனன் மடமகள்
அழகிய பெயரதென்றாள்
எனதரும்குறு இல்லம் வளர்சிறு நாயது
தொலைநடைகொள வழைத்தேன்
குமுதினி வாஉடன் திரும்பிடு நில்லெனப்
பெயரது அதுவே யென்றாள்
கீழே இன்னொரு வடிவம் பார்க்கவும்
கருத்துகள்
(No subject)

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
இது டாப்பு...
இது டாப்பு... 
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
பாரட்டத்தக்கது. //கவிழுது
பாரட்டத்தக்கது.
//கவிழுது ஒருமலர் கரையினிலொருமல
ரென பெருமலர் தொகையாள்/// நல்ல உவமை.
சந்துரு
நன்று..
நன்று..
அன்புடன் மலிக்கா
உன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்
உலகம் உன்னைத்தேடி சுவாசிக்கும்.
http://niroodai.blogspot.com
http://fmalikka.blogspot.com
http://kalaisaral.blogspot.com






