yarlpavanan's படம்

பிறந்தால் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் பிறந்தால்
திரைப்பட நடிகராக வேண்டும்...
திரைப்பட நடிகரானால்
சிவாஜிகணேசனைப் போல
நடிக்க வேண்டும்;
எம்.ஜி.இராமச்சந்திரைனப் போல
ஏழை மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்!
திரைப்பட நடிகரான பின்னே
நடிப்பை மட்டும் நம்பினாலும்
ஏழைகளின் தோழனான
எம்.ஜி.இராமச்சந்திரைனப் போல
தமிழ்நாட்டு முதலமைச்சராக வேண்டும்!
எம்.ஜி.இராமச்சந்திரனால் முடிந்தது
என்னால் முடியுமா என்று
என்னை
நானே மதிப்பீடு செய்து பார்த்தேன்...
கடவுளிடம் இறக்கை வேண்டி
பறந்து போனாலும் கூட
முதலமைச்சர் இருக்கையைத் தானும்
எட்டி பார்க்க முடியாத
உனக்கெல்லாம்
எம்.ஜி.ஆரைப் போல வர
எண்ணம் இருந்தும் பயனில்லையென
கண்டி ஆச்சி சொன்னாள்!
நெஞ்சு முட்டத் துயரம்
எனக்குள்ளே முட்டி மோதியது...
திரைப்படத்தில் நடித்தாலும் கூட
மக்கள் முன்னே நடிக்காமல்
மக்களுக்குள்ளே மக்களாக வாழ்ந்தமையால்
எம்.ஜி.ஆர். முதலமைச்சரானாரெனப் படித்தேன்!
இப்பவெல்லாம்
இரண்டு, மூன்று படங்கள்
நடிச்சாப் போதும் கட்சியே தொடங்கிறாங்க...
முதலமைச்சராகத் தானே நடிக்கவும் வாறாங்க...
நான் படிச்சதிலே
சித்திடைய வாய்ப்புண்டா என
எண்ணிப் பார்த்தேன்...
மக்களுக்குள்ளே நடிக்காமல்
திரைப்படத்தில் நடித்தாலும்
கோடிக்கணக்கில வேண்டிச் சேர்த்தாலும்
தனக்கு மிஞ்சிய எல்லாவற்றையுமே
ஏழைகளுக்குக் கொடுத்து உதவினால் போதும்
எம்.ஜி.ஆரைப் போல முதலமைச்சர் ஆகலாமென
வடலூர் அண்ணன்
அடிச்சுச் சொன்ன பிறகு - என்னால
அமைதியாக இருக்க முடியேல்லையே!
என் நெஞ்சில் இருக்கும் இறைவா!
எனக்கு இன்னொரு பிறப்பு உண்டெனில்
தமிழ்நாட்டிலேயே
என்னைப் பிறக்க வைத்துவிடு
எம்.ஜி.ஆரைப் போல
நானும் முதலமைச்சராகத் தானே!

--------------------------------------------
குறிப்பு: எம்.ஜி.ஆரைப் போல பணி செய்யாமல், அவரைப் போல முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்களுக்கு இப்பதிவைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

5
Your rating: None Average: 5 (1 vote)

கருத்துகள்

rajudranjit's படம்

நண்பரே! படித்தேன் உமது ஆசையை


5

நண்பரே! படித்தேன் உமது ஆசையை தாங்கள் தாங்களக இருப்பதிலே தான் எமக்கெல்லாம் மகிழ்ச்சி, ஏன் இப்போது மட்டும் என்னக் குறைச்சல் உமக்கு எமது இதயம் கனிந்த நல்வரவு,

எண்ணம் சிறப்பானால் எல்லாம் சிறப்பாக அமையும், அது தங்களுக்கிருப்பதால் நிச்சயம் தாங்கள் சிறப்படைவீர்கள்!

பதவி என்பது ஒரு சுமை அதில் இருப்பவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும், என்னதான் பெரிய பதவியாகயிருந்தாலும் பாதுகாவலர்கள் சொல்வதைத் தான் கேட்கவேண்டும், கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்லனும் இது தேவையா?

நாம் சுதந்திர மனிதர்கள் நம்மை எவன் குறைக் கூறுவான் சொல்லுங்கள் பார்ப்போம், ஒரு வலையத்திற்குள் சிக்கி விழிபிதுங்குவதைக் காட்டிலும்,
நம்மால் இயன்றதைச் செய்து புகழடைவதேப் பெருமை, பதவி நமது கால் தூசு, அதிகாரம் என்பதில் சுகமிருந்தாலும் ஆபத்து நிறைந்தது நிம்மதியில்லாவாழ்க்கை!

யாழ்பாவாணர் என்றால் உடன் உலகார் மனதில் உதிக்கும் நற்செயல் புரிபவர் என்ற பெயரைத் தாங்கள் பெற எம் வாழ்த்துக்கள்!

yarlpavanan's படம்

தங்கள் கருத்துக்களை ஏற்றுக்


தங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். என் பதிவிலிருந்து நான் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறேன்.

இந்தியாவில் நடிகராகி முதலமைச்சர்களாகப் பலர் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டிற்காக இதே வழியில் ராமராயன், ராயேந்தர் போன்றோர் அரசியலில் நுழைந்து திரைப்படத்துறையில் வீழ்ச்சி கண்டதோடு; அரசியலிலும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதேவேளை விஜய் போன்ற புதிய நடிகர்களும் கட்சி தொடங்கி அரசியலில் நுழையத் திட்டம் தீட்டியுள்ளனர். இவர்களுக்கான வழிகாட்டலாகவே எனது பதிவை ஆக்கினேன்.

அடுத்து, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை எனக்கு வழிகாட்டல். எம்.ஜி.ஆரைப் போல முயற்சி எடுத்தவர் எவருமில்லையே. நடிப்பால் விருப்பத்துக்குரியவர்களைத்(ரசிகர்களைத்) திரட்டலாம், ஆனால் முதலமைச்சராக எம்.ஜி.ஆரைப் போல முயற்சி எடுக்க வேண்டுமென்பதையே செய்தியாகச் சொல்லியுள்ளேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil