rajudranjit's படம்

இனிய தமிழ் நண்பர்களே! எனது துணைவியார் மகேஷ்வரி அவர்களின் விருப்பத்திற்காக, எனது துணைவியார் அவர்களின் கவிதையை இப்பகுதியில் பதிந்துள்ளேன்!

தாயின் வயிற்றில்
சந்தோஷமாகயிருந்தேன்!

இந்தவுலகத்திற்கு வந்தது
தெரிந்தபோதும் சந்தோஷமாக‌யிருந்தேன்!

அகவை ஒன்பதில் தந்தையிழந்தேன்
அது என் முதல் சோகம்!

அகவை இருபத்தி ஐந்திலே பிரிந்தேன்
பெற்றவளை விட்டு வெகுதூரம்!

அச்சோகத்தையும் என் அறிவு
ஏற்றுக் கொண்டது சந்தோஷமாக!

காரணம் உண்டு எல்லாவற்றிற்கும்
உங்களை சந்தித்தது எனக்கென நீங்கள் கிடைத்தது!

நீங்கள் கொடுத்த நினைவான வாழ்க்கையில்
எனக்கு வெற்றியான சந்தோஷம்!

வாழ்க்கையெனில் வேண்டும் போராட்டம்
அதிலே நிலையான வாழ்க்கையின் அர்த்தமுண்டு!

நம் வாழ்க்கையின் போராட்டம் தொடக்கம்
சொன்னால் எண்ணிலடங்காதே......

இருப்பினும் வெற்றி எனும் கனியை
பறிக்கும் வரை ஓய்வில்லை!

வணக்கத்துடன்: மகேஷ்வரி
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍>>>>>>>>>>>>>>>>>>>>+++>>>>>>>>>>>>>>>>>>>

ஒரு பெண் அழுதால் காரணம் ஆயிரம்
ஆனால் ஒரு ஆண் அழுதால் காரணம் ஒன்றுதான்
பெண்................

வணக்கத்துடன்: மகேஷ்வரி
%%%%%%%%%%%%%%###%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

7
Your rating: None Average: 7 (5 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

நம் வாழ்க்கையின் போராட்டம்


5

நம் வாழ்க்கையின் போராட்டம் தொடக்கம்
சொன்னால் எண்ணிலடங்காதே......

உண்மைதானே. நல்ல கவிதை. தொடர்ந்து எழுதினால் சிறப்படையலாம்.

rajudranjit's படம்

நன்றி ஐயா!


நன்றி ஐயா!

aro...'s படம்

அவர்கள் வாழ்க்கையை பார்க்கும்


7

அவர்கள் வாழ்க்கையை பார்க்கும் விதம் அழகானது; கீழே இருக்கும் குட்டிகவிதைக்கு கோடிகோடியாய் கொட்டி கொடுக்களாம்; அவ்வளவும் அருமை எனது வாழ்த்துக்களை தெரிவிக்கவும் teddy Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!

yarlpavanan's படம்

தங்கையின் கவிதை வாழ்க்கையின்


8

தங்கையின் கவிதை
வாழ்க்கையின் கோட்பாட்டை
விளக்கி நிற்கிறது...
சிறந்த கவிதை!
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நன்றி அன்பரே!


நன்றி அன்பரே!

kalyanasundaram's படம்

கவிதை மிக சிறப்பு.


5
Clap கவிதை மிக சிறப்பு. பாராட்டுகள்.

கா.ந.கல்யாணசுந்தரம்