என்னவளே.........
காதலர் தினம்
ஞாபகம் உண்டா?
இனியவளே நான்...........
உன் ரோஜா இதழிருக்க
எனக்கேன் ஒரு ரோஜா மலர்!
தங்கம்..........
காதலர் தின வாழ்த்துக்கள்
நீ சொன்ன அந்த வார்த்தை
இன்று.........
நமது உண்மைக்காதல்
ஒவ்வொரு நொடியும் துடிப்புடனிருக்க
பரிசென...........
பிள்ளைகள் மழலையில் சிரிக்க
வெட்கத்தில் நீ என்னிதயத்தில்
நம்மிதயம்......
நாளும் சொல்லும் வாழ்த்துக்கள்
காதல் வாழ்க வாழ்கவென்று
மகிழ்ச்சி...........
உன்னில் நானும்
என்னில் நீயும் நீக்கமற இருப்பதால்
செல்லமே........
உன்னில் இருக்கும் எனக்கு
என்னிலிருக்கும் நீயும்
தங்கமே..........
என்னிலிருக்கும் உனக்கு
உன்னிலிருக்கும் நானும்
இதயம் கனிந்து............
ஒருவருகொருவர் பரிமாறிக் கொள்ளும்
காதலர் தின வாழ்த்துக்கள்!
என்றும்: சுஷ்ருவா
கருத்துகள்
உங்கள் காதல் என்றென்றும்
உங்கள் காதல் என்றென்றும் வாழ்கவென்று வாழ்த்துகிறேன்.
கணவன் மனைக்கு இடையில் வரும்
கணவன் மனைக்கு இடையில் வரும் காதலே நிஜக்காதல் என நிரூபித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தங்கள் கவிதையை இன்று தான்
தங்கள் கவிதையை இன்று தான் பார்த்தேன் நண்பரே......
காதலித்து திருமணம் முடித்தாலும், சில இடங்களில் திருமணத்திற்கு பின் காதல் மறைந்து விடுகின்றது......
ஆனால் தங்கள் வாழ்வில் திருமணத்திற்குப் பின்னும் காதல் தொடர்வது..... அரிது... பாராட்டக் கூடிய விஷயம்.......
தங்களுக்கு என் ( தாமதமான) காதலர் தின வாழ்த்துக்கள்...... காதலிப்பவர்க்கு தினந்தோறும் " காதலர் தினமே".......















