rajudranjit's படம்

போட்டிக்கு பிறந்தாள் ருவான்திகா-என் மகள்
அழகு விழிகாட்டி மாவிலை கொழுந்தாய்
அவள் கண்களோ வர்ணிக்க முடியாத அழகு
பொக்கை வாயில் சிரிப்புடன் பிறந்தவள்!

உலகம் மறந்தேன்! என்னையும் மறந்தேன்!
கன்னங்களிரண்டும் பஞ்சு மிட்டாய்
நேர்த்தியான நெற்றியோ இளம்பிறை
அழகு உதடுகள் குவித்து அற்புத அசைவு!

ரோஜா மலரும் தாமரை மலரும் தோற்றது
என் மகளின் நிறம் கண்டு காரணமும் உண்டு!
கையும் காலும் அழகிய அல்லித்தண்டு
அசைவில் ஒரு அற்புதமுண்டு!

பெண்ணாக அவள் பிறக்கவில்லை உண்மையில்
பொன்னாக பிறந்த பொற்குவியல்
அன்னை நாட்டில் அன்னையுடனவளிருக்க
அந்நிய நாட்டில் ஏக்கத்துடன் அவள் தந்தை

5.33333
Your rating: None Average: 5.3 (3 votes)

கருத்துகள்

vinoth's படம்

கவிதை அருமை..


5

கவிதை அருமை..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

நல்லாயிருக்கு.


6

நல்லாயிருக்கு.


சந்துரு


Ragavan's படம்

"பெண்ணாக அவள் பிறக்கவில்லை


5

"பெண்ணாக அவள் பிறக்கவில்லை உண்மையில்
பொன்னாக பிறந்த பொற்குவியல்
அன்னை நாட்டில் அன்னையுடனவளிருக்க
அந்நிய நாட்டில் ஏக்கத்துடன் அவள் தந்தை.."

அருமையான வரிகள் நண்பரே....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..