காதலன்:
என் தேவதை கண்களில் கண்ணீரா?
என் உள்ளமே உன் கண்ணீராய்...
என் செந்நீர் சிந்தியாவது துடைப்பேனடி?
என் செல்லமே உன் கண்களில்
கண்ணீரை கொடுத்த என்னவள் சூடிய
மல்லிகையை பழிக்கின்றேனடி?
எது வந்தாலும் என்
தோள் மீது சாய்ந்து கொள்ளடி...
என் கைகள் உன் கண்ணீரை துடைக்கட்டும் ....!!!
காதலி:
நான் மல்லிகை பூ வைக்கிறதே
உன்னை நினைத்து தானே - அதை
ஏன் பழிக்கிறாய்.....
காதலன்:
மல்லிகையானாலும்
மலர் சரமே ஆனாலும் - என்
மங்கை அவை சூடும்
மலர் மாலையே ஆனாலும் - என்
மகாராணி உன்னை கண் கலங்க வைத்தால் - என்
மனம் தாங்காதடி !
ஆதலால் தான் அந்த மல்லிகையை
பழிக்கின்றேன் என் ரதியே .....!!!
(காதலி காதலனுக்கு பிடித்த மல்லிகை பூவை தலையில் சூடுகிறாள்.என்னவோ தெரியவில்லை அவளுக்கு தலை வலி வந்துவிடுகிறது.தன் காதலிக்கு தலை வலி வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத காதலன் மல்லிகை பூ தனக்கு பிடித்திருந்தும் அதனை பழித்து இந்த கவிதையை எழுதுவதாக ஒரு சிறிய கற்பனை)
கருத்துகள்
மல்லிகை வேண்டாம் என்றால்
மல்லிகை வேண்டாம் என்றால் என்ன? ரோஜா மலர் காத்துக் கொண்டிருக்கிறதே.... காதலிக்காக மலரை மாற்றி மகிழலாமே. நல்ல கற்பனை. பாராட்டுக்கள்.
கனகாம்பரம்.. கடையில கேட்டு
கனகாம்பரம்.. கடையில கேட்டு வாங்கி வைக்கலாமே,............?!! அருமையான பதிவு,..................

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
சிறந்த எண்ணப்பதிவு...
சிறந்த எண்ணப்பதிவு...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
ஆஹா இலக்கியங்களில் தான்
ஆஹா
இலக்கியங்களில் தான் இப்படியான வர்ணனைகள் இருக்கும்
புதுக்கவிதையில் வந்திருப்பது சிறப்பாகவே உள்ளது.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...













