"என் தேசமே"
கலாச்சாரம் கதை பேசிய ஊரிலின்று
விபச்சார கதைகள் வீதியெங்கும்
பத்திரிக்கை செய்தி பார்த்த நானும்
பரதவித்தேன் பசி இழந்தேன்
பண்பிழந்தவர் நம்மவரா என்று?
நசுங்கிய நாசி வலியோடும்
நானும் இங்கு கதரலானேன்
பத்தினிகள் வலம்வந்த
பத்தினிப் பூமி இது
வேசிகள் வீதி உலா வர
விபச்சாரம் விளையாடுகிறது
கலாச்சாரம் கைகட்டிப் பார்க்கிறது
கண்களைப் பொத்தி
வேடிக்கை பார்க்கிறது
விநோதமாய் இருக்கிறது
கலை தவழ்ந்து நடை பயின்று
நாட்டியமாடிய நாடிது
விலைமாதுக்கள் விளையாட்டுக்கல்ல
வீணரே! வெந்து நொந்து சொல்கிறேன்
பெண்களைக் காக்காமல்
தங்கள் கண்களைக் காத்தென்னபயன் ?
கருத்துகள்
வணக்கம் நண்பரே, மிகவும்
வணக்கம் நண்பரே,
மிகவும் வேதனையான செய்தி. :crய்2: ...... அதனை திறம்பட எழுத்துக்களில் கவியாய் வடித்துள்ளீர்... அருமை
சிக்கலான பாடுபொருளைச்
சிக்கலான பாடுபொருளைச் சுகமாகச் சொல்லியுள்ளீர். இன்னும் சிறப்பாகச் சொல்ல முனைந்திருக்கலாம். இப்பாடுபொருளை எடுத்துச் சொல்லக் கையாண்ட முறையைப் பாராட்டுகிறேன்.

தங்கள் கவிதைக்குப் பதிலாக "எதை ஊட்டி வளர்க்க வேணும்?
(http://tamilnanbargal.com/node/37727)" என்ற கவிதையைத் தருகின்றேன்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வருந்தக் கூடிய ஒரு விடயம்
வருந்தக் கூடிய ஒரு விடயம் மற்றும் கலாச்சார சீர்கேட்டை திருத்த ஒரு உபயமும் கூட இக்கவிதை!
கலாச்சாரம் கைகட்டிப்
கலாச்சாரம் கைகட்டிப் பார்க்கிறது
கண்களைப் பொத்தி
வேடிக்கை பார்க்கிறது

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...








