நானும் காதல் கவிதை
எழுதியிருக்கிறேன்.....!
எழுதிக்கொண்டிருக்கிறேன்....
இவையெல்லாம்
ஆதியில்லாமல் அவதரித்த
கடவுளின் குழந்தைகள்;
காளை ஈன்ற கன்றுகள்;
கற்பனை பொழிவில்
கர்பமான இல்லாதவிதையின்
தலை பேறு;
நானும் யோசிப்பதுண்டு
வழியில்லாத வீட்டிற்கு
வழிபோக்கன் வந்தது போல
இவை எனக்குள் பிறக்க
காரணமென்ன..........?;
அவள் எவளோ வந்து
அருகமரும் போது
அடித்தொண்டைக்குள்
அடை படும் கவிதைகளுக்கு
முன்னோடியாய்; மூர்ச்சையாவதை
சொல்லி கொடுக்க வந்திருக்களாம்
என நானும் சொல்லிக்கொள்வதுண்டு;
இன்றும் அவை பிறந்து
காகிதங்களை கறையாக்குகின்றன
காதலி இல்லாமலே.......
உயிரில்லா உடல் நடப்பதை போல...... 
கருத்துகள்
அழகான கவிதை இதற்கு கருத்து
அழகான கவிதை
இதற்கு கருத்து எழுத ஆரம்பித்தேன். அதுவே கவிதையாகிவிட அதை தனியாக பதிந்திருக்கிறேன்
இங்கே ... காரணமில்லாமல் சில கவிதைகள் URI: http://tamilnanbargal.com/node/37853
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தங்கள் உணர்வின்
தங்கள் உணர்வின் வெளிப்பாடே
தங்கள் பாவின் வெற்றியென
தங்கள் பாவைப் படித்ததும் அறிகிறேன்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
என்ன அரோ எங்கே இருக்கின்றீர்
என்ன அரோ எங்கே இருக்கின்றீர் என்றே தெரியமாட்டேங்கிறது, திடீரென ஒரு இடியும் மின்னலும் போல் வெளிப்படுகின்றீர்! அருமையா இருக்கு அதுபோல் தங்கள் மேல் பொறாமையும் இருக்கு எனக்கு காரணம் நல்லக் கவிதையால்!
இன்றும் அவை
இன்றும் அவை பிறந்து
காகிதங்களை கறையாக்குகின்றன
காதலி இல்லாமலே.......
இது விரக்தியா
இல்லை
தங்கள் வருங்கால தோழிக்கு நீங்கள் தரும் வாக்குறுதி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...














