sugapiriyan's படம்

கவ்விய இருளில்
என் வாகன விளக்கொளி..
உன்னை நோக்கி வந்து
கொண்டு இருக்கிறேன்..

அழைப்புக்கு நன்றி
உன் மண நாள் கொண்டாட
நானும் வருகிறேன் -மறக்க
இயலாத நினைவுகளோடு .

காதலின் ஈரம்
வாடாமல் உன் திருமண
அழைப்பில் வழிகிறது -
என் கண்களில் இருந்து

மாலை கடற்கரையில்
மடிமீது தலை சாய்த்து
முடிகோதிய உன் விரல்கள்..

பார்வைகளையே பரிசாக்கும்
உன் கண்கள்.
என்னை தழுவி சலித்த
உன் கைகள் .
நடனமாய் நடக்கும்
உன் கால்கள் .
என்னை பூட்டி வைத்ததாய்
சொன்ன இதயம்..
சாவி தொலைத்தாயா?
இதயம் தொலைத்தாயா ?

சந்திப்போம் மணமேடையில்
அன்பே..
உன்கைகளை கட்டிவிடு..
மடிமீது தலை சாய்த்து
முடிகோதிய உன் விரல்கள்..
நீண்டுவிடும்
என் கண்ணீர் துடைக்க..
Cry Cry

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

கருத்துகள்

aro...'s படம்

காதல் வலியில் எங்களுக்கு


9

காதல் வலியில் எங்களுக்கு கிடைத்த சுகமான கவிதை... Clap Clap Clap Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


yarlpavanan's படம்

(No subject)


6

Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil