Ponvannan's படம்

என் எழுத்தினால் ஒருவர் அமைதி கொண்டால்
என் எழுத்தினால் ஒருவர் மனம் திருந்தினால்
நான் எழுதிக் கொண்டே இருப்பேன்

என் சொல்லினால் ஒருவர் மனம் மகிழ்ந்தால்
என் சொல்லினால் ஒருவர் வெற்றி பெற்றால்
நான் சொல்லிக் கொண்டே இருப்பேன்

என் பாட்டிலே ஒருவர் மனம் உருகினால்
என் பாட்டினால் ஒருவர் உண்மை அறிந்தால்
நான் பாடிக் கொண்டே இருப்பேன்

என் அறிவுரையால் ஒருவர் வாழ்வு சிறப்படைந்தால்
என் அறிவுரையால் ஒருவர் நோக்கம் நிறைவேறினால்
அந்த அறிவுரையைத் தந்து கொண்டே இருப்பேன்

என் அனுபவத்தால் ஒருவர் நன்மையடைந்தால்
என் அனுபவத்தால் ஒருவர் மேன்மையடைந்தால்
அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டே இருப்பேன்

நல்ல நண்பர்களால் நமக்கு பயன் ஏற்பட்டால்
நல்ல நண்பர்களால் நமது குறை தீருமென்றால்
அந்த உறவுகளை வளர்த்துக் கொண்டே இருப்பேன்

என் செயலினால் மற்றவர் அகம்குளிர்ந்தால்
என் செயலினால் மற்றவர் திருப்தியடைந்தால்
அதைத் தொடர்ந்து கொண்டே இருப்பேன்

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே நன்முறையில்
வாழ்ந்திட வேண்டிய வழிமுறைகள் கற்றேனும்
என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பேன்

7.66667
Your rating: None Average: 7.7 (3 votes)

கருத்துகள்

aro...'s படம்

வார்த்தைகளில் நீங்கள் கொடுத்த


6

வார்த்தைகளில் நீங்கள் கொடுத்த உயிர் கவிதையிலே கலந்து கவிதை ரசிகன் ஒவ்வொருவனின் உள்ளத்திலும் நீங்கள் வாழ்வீர்கள்.... அருமையான கவிதைக்கு அன்புகலந்த பாராட்டுகள்.... Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


Ponvannan's படம்

உங்கள் பாராட்டுக்கு என் நன்றி


உங்கள் பாராட்டுக்கு என் நன்றி கவிதை கிறுக்கன் அவர்களே

yarlpavanan's படம்

எழுத்து மூலம் -


8

எழுத்து மூலம் - நீங்கள்
எடுத்துச் சொன்னது அதிகம் - அவை
எங்கள் உள்ளத்தில் இருந்து
எப்போதும் உங்களை நினைவுபடுத்தும்...
எழுதுகையில் எமக்கு மகிழ்வு
வாசித்தவர் எழுதியதைப் படித்து
எழுத்தின் பெறுமதியை பேசுகையில்
நாடே மகிழ்வடையும்!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Ponvannan's படம்

உங்கள் பாராட்டுக்கு என்


உங்கள் பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றி.
எழுத்தாளன் எழுத்தை ஆள்வான். அவன் படைப்போ உலகை ஆளும் எனும் கருத்தை புலப்படுத்திய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

rajudranjit's படம்

எல்லோருக்கும் மனம்


9

எல்லோருக்கும் மனம் உண்டு
சிலருக்குத் தான் நல்ல மனமும் குணமும் சிறந்த எண்ணங்களும் இருக்கும்!

ஏதோ பிறந்ததிற்காக வாழாமல் அடுத்தவர்களுக்கு பயன்படும்படி வாழ்வதென்பதின் அர்த்தம் புரிந்து செயல்படுபவர்கள் பாராட்டிற்கும், வணக்கத்திற்கும் உரியவர்கள் என்பதை தங்கள் அருமையானக் கவிதை மூலம் நிறுபித்துள்ளீர்கள் ஐயா!

பாராட்டுக்கள்! Clap Clap Clap

Ponvannan's படம்

உங்கள் பாராட்டுக்கு என்


உங்கள் பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றி.