famal's படம்

என்னை ஏதோ செய்த ஆட்டக்காறி.

ஆடிப்பறித்தவள்
நீ - என்
இதயத்தை..

மிடுக்காய்
ஒழியும் - உன்
சிரிப்பில்
சிதைந்தவன்
இவன்.

விலகும்
சேலைக்குள்
விரல் பதித்து
உயிர் தொலைத்தவன்
இவன்.

அசையும்
இடுப்பில்
என்
இதயத்தை மாட்டி
காமத்தை பறித்தவள்
நீ.

நீ
சிணுங்குவாய்.
என்னுள்
சீறுவானம் வெடிக்கும்.
நீ
ஓரமாய் நெளிவாய்
என்
நெஞ்சம் பத்திக்கும்.

உன்
தகதிமிதாவில்
நர்த்தனம் ஆடின
என்
மோகக் கனவுகள்.

நீ
கூந்தல் விலக்க
என்
ஏந்தல் தொடங்கும்
ஓர்
காதோர
முத்தத்திற்காய்.

நடன களைப்பில்
நளினமாய் குனிவாய்,
கண்கள் மட்டும்
என்னை விட்டு
அங்கேயே சுற்றும்.

நீ
சேலையைச் சொருக,
என்
விழிகள் விலகும்.
காற்றே போகா
உன்
தாவணிக்குள் கூட
என்
தாகம் மேயும்.

பளிங்கு இடையில்
நெளியும் வியர்வை
ஓரமாய் ஒதுங்கும்.
என்
வேகம் கூடும்.
விவேகம் குறையும்.
வேடுவ வீரம்
வீராப்பாய் தோளேறும்.

ஆடி அமர்ந்த
ஆறடி நடனம்
அருகே அமர
ஆங்கே
தொடுகிறேன்.
என்
விரல்களுக்குள் சிக்கியவை
கைகளிலிருக்கும்
உன்
புகைப்படம் மட்டுமே.

http://rajamal.blogspot.com/2012/02/blog-post_09.html

6.5
Your rating: None Average: 6.5 (4 votes)

கருத்துகள்

aro...'s படம்

அக்கு வேற ஆணி வேற பிரிச்சி


8

அக்கு வேற ஆணி வேற பிரிச்சி பாடியிருக்கிங்க..................

அருமை.. அருமை... Clap Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


yarlpavanan's படம்

தங்கள் எண்ணங்களை


7

தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும்
கவிதையாக இருக்கிறதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

கவிதை அழகு,.


4

கவிதை அழகு,.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


selvakumaar's படம்

நல்ல கவிதை. உங்கள் சொற்டொர்


7

நல்ல கவிதை. உங்கள் சொற்டொர் நன்றாக அமைந்துள்ளது. நன்றி.


அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
selvakumaar's படம்

நல்ல கவிதை. உங்கள் சொற்டொர்


7

நல்ல கவிதை. உங்கள் சொற்டொர் நன்றாக அமைந்துள்ளது. நன்றி.


அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்