அன்பெனும் வசந்தம் புக- என்னுள்
பண்பது ஓங்க நேசமுடன் காதல் எழ
கண்டேன் என்னவளை என் மன நாயகியை
அழகு விழிகள் படபடக்க ஆரணங்கு- அவள்
மானல்ல மயிலல்ல மகேஷ்வரியவள்
மங்கையின் மனமதிலமர அனுமதி கேட்டேன்
கோபமல்ல கோதையின் வதனத்தில்- இருப்பினும்
பெண்ணுக்குள்ள வழியது மறக்காத மகேஷ்வரியவள்
எனதிதய சிம்மாசனத்தில் நீக்கமற அமர்ந்தாள் ஆட்சிபுரிய
எனக்கவள் செல்லமென உருவெடுக்க- நான்
அவளுக்கு தங்கமானேன் விலைமதிப்பற்று
நாளும் தொலைபேசியினூடே நவரசமும் சொட்ட
காலம் கனிந்துவர காதல் காத்திடுமா- வாழ்க்கையில்
மோதலில்லை எம்முறவினரிடையே மறுப்பது வலுவுற
பொறுப்பதுக் கூடிக்காதல் வாழ்கவென வெற்றி
உற்றம் சுற்றம் துறந்தே வந்தாள் என்னவளே- நீ
எனை மட்டும் நம்பியே வந்தவுனக்கு நான் செய்ததென்ன என்னருமை செல்லமே வாழ்க வளமுடன் நீ
காதலன் கணவனாக காதலி மனைவியாக- மாறி
சிற்றம்பலமுடையான் சக்தி சரிபாதி கொண்டோன்
தில்லையில் அன்னைசிவகாமி வாழ்த்தத் திருமணமே
அன்றுநாள் பதினொன்று மாதம் பிப்ரவரி- ஆண்டோ
இரண்டாயிரத்து எட்டு அழகிய காலைப் பொழுது
என்னவள் திருக்கரம் பற்றினேன் பெரும்பாக்கியம் எனக்கே
கிட்டாத பொக்கிஷம் கிடைத்ததால் சந்தோஷம்- எனக்கு
மட்டில்லா மகிழ்ச்சியின் உச்சத்தில் நாமிருவர்
நண்பர்கள் பாராட்ட நன்றென வாழ்க்கைத் தொடக்கம்
எம் காதல் பரிசென இறையளித்த வெகுமதி நாளைய
உலகிற்கு சான்றென பெண்கள் குலம் புகழ்பாடியுயர்த்த
ஈடில்லா பெருஞ்செல்வமாய் பெற்றோமே இருமகள்கள்!
நாம் இணைந்த இத்திருநாள் காலம் காலமாய்-மகிழ பெருமையுற எமக்கது பொன்னானநாள் வளமையுற
என் மனைவி மகிழ்வுற என் காதலிக்கு திருமண வாழ்த்துக்கள்!
மனைவியாக ஆனாலும் என்னவளே என்காதலியே- நீ
ஆண்டுகள்பல வாழ்வாங்குவாழ மனதார வாழ்த்துகின்றேன்
வளமுடனும் நலமுடனும் நீவாழ திருமண வாழ்த்துக்கள்!
இன்பமே எல்லாமென இந்நாளில் பெருமைகொள்ள- உன்
வாழ்வில் வசந்தமது வீச தென்றலது மகிழ்விக்க
இறையருள் மெய்பிக்க வாழ்க என் அன்பே வளமுடன் நீ!
கருத்துகள்
மனைவியாக ஆனாலும் என்னவளே
மனைவியாக ஆனாலும் என்னவளே என்காதலியே- நீ
ஆண்டுகள்பல வாழ்வாங்குவாழ மனதார வாழ்த்துகின்றேன்
வளமுடனும் நலமுடனும் நீவாழ திருமண வாழ்த்துக்கள்! .... இதில் நாங்களும் சேர்ந்து கொண்டு உங்களையும் வாழ்த்துகிறோம். நீங்கள் இருவரும் இப்படியே அன்போடும் பன்போடும் பல்லாண்டு காலம் வாழ்கவென மகிழ்வோடு வாழ்த்துகிறோம்.
வாத்துக்கள்; உங்கள் காதல்
வாத்துக்கள்; உங்கள் காதல் ஒவ்வொரு திருமண நாளிளும் புதிதாய் பிறப்பெடுத்து; நேற்று பிறந்த குழந்தைபோல் மகிழ்விடன் வாழ்க;

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
திருமண நாள்
திருமண நாள் வாழ்த்துகள்.
நல்லறமாக இல்லறம் நடாத்தும்
தங்களுக்கு
வாழ்வில் கிடைக்க வேண்டிய
பதினாறு செல்வங்களும் கிடைக்க
இறைவனை வேண்டி நிற்கிறேன்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
உங்களின் இந்த திருமண நாளில்
உங்களின் இந்த திருமண நாளில் உங்களுடன் நண்பராக இணைவதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் கவிதை மிகவும் அழகானவை. நன்று. இந்த திருமண நாளில் உங்கள் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் கைகூட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். இனிதாய் அமையட்டும் எதிர்காலங்கள் அன்புடன் உங்களை வாழ்த்துகிறேன்.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
இருவரும் சிறப்பாய் வாழ
இருவரும் சிறப்பாய் வாழ நாங்களும் வாழ்த்துகிறோம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










