yarlpavanan's படம்

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால்
நாட்டுக்கு வருவாய் கிடைக்கிறதாய்
அரசு முழங்கினாலும் - பாரும்
அவர்கள் விட்டுச் சென்ற
எச்சங்களாய்
இன, மதப் பண்பாடுகள் சீரழிவை...
சுமக்க முடியாத சேலை
கட்டவேண்டியோர்
இடுப்பு, மார்புக் கச்சுகளை மறைக்க
கிழிந்த துணியைப் போர்க்கும் நிலை...
கரும் சுருட்டு, வெண் சுருட்டு,
கரும் தண்ணி(அற்ககோல்), வெண் தண்ணி(கள்ளு)
போதாக்குறைக்கு வைப்பாட்டி எல்லாமே
சுற்றுலாப் பயணிகளால் பரவியதே...
சுற்றுலாப் பயணிகளின் வைப்பாட்டிச் செயல் தான்
நம் நாட்டு விலைமகள் வணிகத்திற்கு
வேராச்சே...
வெளிநாட்டுப் பண்பாடுகள்
நம் நாட்டுக் காற்றில் வீச
நம்ம திரைப்படங்களும் விளம்பரமே...
தாயா, மகளா அழகிலே
பெரியவள் என்ற போட்டியில்
மகள்மார் சீரழியத் தானே முடியும்...
இன்னும் பல இருந்தாலும்
எழுத
என் எழுதுகோல் மறுக்கிறதே!
அறிஞர்களே... பெரியோர்களே...
பாலூட்டிப் பிள்ளை வளர்க்கையிலே
தாய் மொழியோடு பண்பாட்டையும்
ஊட்டி வளர்க்கத் தவறிவிட்டால்
வருங்காலத்தில்
மனிதர்களும் விலங்குகளைப் போல
ஆடையின்றி உலாவ நேரிடுமே!

6.5
Your rating: None Average: 6.5 (4 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

எவ்வளவு பெரிய உண்மையான


8

எவ்வளவு பெரிய உண்மையான கருத்து. தாய் மொழியோடு பண்பாட்டையும் ஊட்டி வளர்க்கத் தவறிவிட்டதன் விளைவுதான் நாம் இன்று காணும் சமுதாயச் சீரழிவு.

rajudranjit's படம்

ஐயா பொன்வண்ணன் அவர்களின்


7

ஐயா பொன்வண்ணன் அவர்களின் கருத்தை வழிமொழிகின்றேன்!

yarlpavanan's படம்

அறிஞர் பொன்வண்ணனுக்கும்


6

அறிஞர் பொன்வண்ணனுக்கும் rajudranjit இற்கும் நன்றி.
நாளைய தலைமுறையை நாம் தாய்மொழியொடு பண்பாட்டையும் ஊட்டி வளர்த்து இன்றைய சமூகச் சீரழிவைப் போக்க முயற்சிப்போம்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

பாலூட்டிப் பிள்ளை


5

பாலூட்டிப் பிள்ளை வளர்க்கையிலே
தாய் மொழியோடு பண்பாட்டையும்

இங்கே தான் தாயின் சிறப்பும் கடமையும் இருக்கிறது. அது பிள்ளை பெறுவது மட்டுமல்ல. நல் எண்ணங்களை வளர்த்து நல்லவர்களை சமூகத்திற்கு கொடுப்பது.
Clap Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

தங்கள் கருத்தை முழுமையாக


தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil