kalyanasundaram's படம்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.....

அகரம் பயின்ற நாள் முதலே
அன்னைத்தமிழில் பேசும் கலை கற்றோம்!
ஆன்மிகம் வளர்த்த இன்தமிழ்
ஆலம் விழுதாய் நிலமதில் நிலைத்தது!
இதழியல் வரலாற்றில் இமயம் தொட்டு
இணைய தளத்திலும் தடம் பதித்தது!
ஈதலும் இசைபட வாழ்தலும் நம் தமிழர்
ஈடிலா கொள்கையாய் சிரமேற்கொண்டனர்!
உலகின் மொழிகளில் செம்மொழியென
உன்னத இடம் கொண்டு உலவுகிறது!
ஊருணி பலருக்கும் உதவுதல் போல்
ஊக்கமுடன் நம் அறிஞரெல்லாம் செயல்படுவர்!
எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போமென
ஏங்கும் இளைஞர் அயராதுழைப்பர்!
ஏற்றமிகு சொல்வனத்தில் புவியெங்கும்
ஐயமின்றி தேன்பொழியும் மணமலறாய்
ஐயன் வள்ளுவன் திருவடி குறள் சிறக்க
ஒப்பிலா மொழியிதுவென உலகு மொழிகளை
ஒருங்கிணைத்து எபோதும்
ஓங்கு புகழுடன் இனியத் தமிழினி
ஔவை முதல் இக்கால‌ கவிகள் வரை
புகழ் சேர்த்து புவிமீது ஓயாது உலவும் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.

7.28571
Your rating: None Average: 7.3 (7 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

தமிழின்பால் அன்புகொண்ட


5

தமிழின்பால் அன்புகொண்ட கா.ந.கல்யாணசுந்தரம் அவ்ர்களின் இக்கவிதை மிகச் சிறப்பாக எழுதப் பட்டுள்ளது. அருமையான கருத்துள்ள கவிதை. ஓங்கு புகழுடன் இனிய தமிழ் என்றும் புவிமீது ஓயாது உலவும் எனும் சொல் மிக மிக உண்மையானது. அன்பான பாராட்டுகள்.

yarlpavanan's படம்

"எங்கும் தமிழே முழங்கக்


8

"எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போமென" என
தமிழைப் பேண அழைத்தமைக்குப் பாராட்டுக்கள்.
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

தமிழுக்கு பெருமையென இக்கவிதை


9

தமிழுக்கு பெருமையென இக்கவிதை இயற்றியக் கவியே உமக்கு எமது பாராட்டுக்கள்!

vinoth's படம்

தமிழ் உயிர்களை வரிசைப்படுத்தி


8

தமிழ் உயிர்களை வரிசைப்படுத்தி கவி புனைந்த தங்களை மனமார்ந்து பாராட்டுகிறோம்.

Clap Clap Clap Clap Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


selvakumaar's படம்

நல்ல முயற்சி. கவிதையில்


4

நல்ல முயற்சி. கவிதையில் மரபுக்கவிதை, புதுக்கவிதை போல் இதனை புது ஆத்திசூடி என்று கருதலாம் என்று நினைக்கிறேன்.


அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
டணிஸ்கரன்'s படம்

தமிழின் சிறப்புகள் உங்கள் கவி


7

தமிழின் சிறப்புகள் உங்கள் கவி வரிகளால் மேலும் சிறப்புற்றன.
Clap Clap Clap Clap
நன்றி.
உரிமையோடும் உணர்வோடும் இளங்கவி.