Skip to main content

எங்கள் ஆசிரியரே..!

URI: http://tamilnanbargal.com/node/36464
கருத்துகள்: 5Likes: 0380 views

எங்கள் ஆசிரியரே..!

venishaj's படம்

எங்கள் ஆசிரியரே..!

மனக்கோட்டையின் தெய்வமே...!
மாற்றத்தின் வழித்தடமே...!
வாழ்த்துக்கள் கூற எங்கள் உதடுகள் முற்படும் போது
எங்கள் மன வார்த்தைகள் எழுத்து வடிவில் ஏனோ
நான்தான் என்று முந்திக் கொள்கிறது.
எழுத்தறிவித்த உங்களுக்கு எங்கள் நன்றி கலந்த
வணக்கங்கள்....!

வறண்ட வகுப்பறையில் எங்களுக்கு வசந்தம் நீங்கள்!
இருண்ட இதயங்களுக்கு புத்துணர்வு தந்த பூபாளம் நீங்கள்!

Ice Cream – Sweet – வாழ்த்து அட்டையாக,
அரட்டையாக, நகைச்சுவையாக, பாடமாக பழகிய பாதையில்
வீசிய வசந்தம் நீங்கள்.
ஆசிரியர் என்ற ஆணவம் அறவே இல்லாமல்
அமைதியாக வலம் வந்தவர்கள்.

உடனிருந்த உருவமில்லா ஒளியே! எங்கள் விழியே!
உன்னிலும் கற்றோம்!
உன்னையும் ஆசிரியராகப் பெற்றோம்!
உன்னையும் வாழ்வில் பிரதிபலிப்போம்!
தொடர்ந்து வீசட்டும் உம்முடைய பூங்காற்று
அது மணம் பரப்பட்டும் எமை பார்த்து......

எங்கள் மனக்கோட்டையில்
உங்களுக்கும் ஒருக் கோவில்
அதில் பிறக்கும் உம் நினைவுகள்
எங்கள் வாழ்வின் சிறப்புகள்....

விடியற்கால நட்சத்திரத்தின் பிறப்பிடமே
வளங்கள் பல பெற்று திருவிழா நாயகியாக
முடிசூட வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!...

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

aro...'s படம்

குருவண‌க்கம் பற்றி சொல்லவில்லையெ..................?

அருமை

அன்புடன்:
கவிதை கிறுக்கன்