மனம் உண்டு முன்னேற வழியுண்டு
தினம் வென்று வருவோர்க்கு புகழுண்டு
வனம் சென்று உழைத்தாலும் பொருளுண்டு
தனம் கொண்டு வந்தார்க்கு வாழ்வுண்டு
துணையுண்டு தளராத உடலுண்டு
துணிவுண்டு மாறாத அறிவுண்டு
தணியாத ஆக்கத் திறன் கொண்டு
திணையளவு சேர்த்தாலும் மகிழ்வுண்டு
முயல் என்று விளித்திட்டால் வந்திடுமோ ஆமை
முயலாது வெற்றிதான் கிட்டாதே உண்மை
அயலாரை நம்பாது தேடிடுவோம் திண்மை
புயலாகச் சென்றேநாம் புரிவோமே நன்மை
பழிசொல்ல பலபேர்தான் காத்திருப்பார் இன்று
வழிசொல்ல அவரைத்தான் காணோமே அன்று
தொழில் பலவும் கற்றே நாம் உயர்வோமே இன்று
எழில் யாவும் பெற்றே தினம் வாழ்வோமே நின்று.
கருத்துகள்
"பழிசொல்ல பலபேர்தான்
"பழிசொல்ல பலபேர்தான் காத்திருப்பார் இன்று
வழிசொல்ல அவரைத்தான் காணோமே அன்று
தொழில் பலவும் கற்றே நாம் உயர்வோமே இன்று
எழில் யாவும் பெற்றே தினம் வாழ்வோமே நின்று"
உழைப்பின் அருமையை உலகுக்கு எடுத்துரைத்த தன்மை
மிகவும் பாராட்டத் தக்க முறையில் அமைந்துள்ளது ஐயா! உழைக்காதவனும் உழைக்க எண்ணும் அற்புதமானக் கவிதை!