syedali's படம்

உழைப்பு 

மனிதன் வாழ்வதற்காக 
இறைவன் அருளிய அற்புத 
பொக்கிஷம் 
இவன் 
உயிருள்ள மனிதன் 
உடல் உறுப்புக்களின் உழைப்பின் 
உயிர்வெளிச்சம் 
மண் 
பொருள் உயிர்கள் உருவங்களில் 
உழைப்பின் சில அடையாளம் 
இரவல் உறவு 
மனிதன் 
மயானம் செய்கையில் 
அவனில் உதிர்ந்து விழும் 
அற்பங்கள் 
உணர்வும் 
உணர்ச்சிகளும் மனிதனின் 
உழைப்பின் உருவமற்ற 
ஆன்மா 
மனிதனை 
ஆட்டி வைப்பவர்கள் 
அவன் ஆளவேண்டியவர்கள் 
மனக் கோட்பாடு 
எண்ணமும் செயலும் 
நாளைய இறைசன்னதியின் 
நன்மை தீமைகளின் 
சாட்ச்சியாளர்கள் 
உழைப்பில் 
அகத்திலும் புறத்திலும் 
நடுநிலையை பேணும் மனிதன் 
உயர்கிறான் இறை அகத்தில் 
அன்பு 
காதல் 
நட்பு 
உறவுகள் 
இவை மனித உழைப்பால் 
மனிதன் தேட வேண்டியவைகள் 
புன்னகையை 
செலவு செய்து 
உறவுகளை சேமிப்பவன் 
உழைப்பில் உயர்ந்தவன் 
 குறிப்பு :உழைப்பைத் தேடி அக்கறை கடந்து வந்து 
பொருளை மட்டுமல்ல நல்ல உறவுகளையும் சம்பாதித்து நாளை ஊருக்கு செல்கிறேன் 
விடுமுறைக்குப்பின் மீண்டும் உழைக்க வருவேன் 
பொருளையும் நல் உள்ளங்களையும் 
-செய்தாலி 

5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/10/blog-post_31.html

கருத்துகள்

yarlpavanan's படம்

நல்லெண்ணங்கள் நிறைந்துள்ளன


7

நல்லெண்ணங்கள் நிறைந்துள்ளன


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


aro...'s படம்

கருத்துக்களும் கவிதையும்


6

கருத்துக்களும் கவிதையும் அருமை Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


rajudranjit's படம்

நல்ல முறையில் விடுமுறையை


4

நல்ல முறையில் விடுமுறையை அனுபவியுங்கள், வாழ்த்துக்கள்!