kumaran16's படம்

உறுதி மொழி

இன்று என்று எழுந்த ஊக்கம்
நன்று வென்று வாழும் பாரும்
தொன்று தொட்டு ஊரும் சோகம்
கொன்று போட்டு நாளும் தேறும்
அன்று அன்று வந்த தெல்லாம்
கண்டு வென்று வாழ்தல் போதும்
சென்று போன காலம் மாறும்
நின்று நிலைக்க உழைப்போம் நாளும்

உண்டு உறங்கி இனம் பெருக்கி
ஒர் புழுவைப் போல வாழ்தல் சரியோ
கொண்டு வாழும் ஆறு அறிவை
நன்கு பெருக்கி துயர் துடைப்போம்
நன்று உலகில் எண்ணி வாழும்
பண்பு தேடி இனிமை கொள்வோம்
அன்பு, காதல், கடமை செய்து
வென்று வாழும் உலகம் செய்வோம்

5
Your rating: None Average: 5 (2 votes)

கருத்துகள்

aro...'s படம்

நல்லா


4

நல்லா இருக்கு................. வாழ்த்துக்கள் Clap Clap Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


yarlpavanan's படம்

நன்று நன்று


6

நன்று நன்று


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil