பணப் போர்வை
எம் உடலை மூடியிருப்பின்
பாசங்கள்-
அதிகரிக்கும்....!!
பணம்-
இன்றேல்
மனிதப் பிணமாய்
உடல் சேரும்...!
உறவுகள்-
உள்ளத்தை விட்டுப் போகும்..!
உயர்ந்தநிலையிலே
உவந்து புகழ் பாடும்
உறவுகள்-தாழ்வாய்
வறுமை வீட்டிற்குள்
வாழும் பொழுதுகளில்
தூரத்தே போய் நின்று
துயரப் படுத்தும்......!
உள்ளத்து விழியைக்
குருடாக்கிப் பார்க்கும்
உறவுகளின்
"பார்வைகள்"
வெறும் போலிகளே..!
வாழ்க்கைப் பாதையை
வஞ்சனை முட்களால்
மூடிவிட்ட இந்த-
கரிய இரவுகளின்
ஆடம்பர போர்வைகள்...!
கருத்துகள்
பணம் குணம் மாற்றும் பணம் மனம்
பணம் குணம் மாற்றும்
பணம் மனம் மாற்றும்
பணம் போர்வையென ஒரு பதம் மாறி ஜொலிக்கின்றது! ஆமாம் கவிதாயினி இவ்வளவு நாள் தமிழ் நண்பர்கள் தளம் பக்கமே காணவில்லை தங்களையும் தங்கள் அருமைக் கவிதைகளையும் ஏன்?
உள்ளோரைத் தேடிச் செல்வதும்
உள்ளோரைத் தேடிச் செல்வதும் உறவுதான்
இல்லாரை விட்டு விலகுவதும் உறவுதான்
நல்ல குணங்களையும் நல்ல நடத்தையையும் உள்ளவர்களை இன்றைய உறவுகள் ஞாபகத்தில் வைத்திருந்தாலே அது அதிசயம்தான்
-நல்ல கவிதை
ஆம், நிஜமான பாசத்தை பணம்
ஆம், நிஜமான பாசத்தை பணம் மறைத்துவிட்டு போலியை மட்டுமே உடுத்திக்கொள்கிறது.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இன்றைய உறவுகள் இப்படித்தான்
இன்றைய உறவுகள் இப்படித்தான் உள்ளது...
"உயர்ந்தநிலையிலே
உவந்து புகழ் பாடும்
உறவுகள்-தாழ்வாய்
வறுமை வீட்டிற்குள்
வாழும் பொழுதுகளில்
தூரத்தே போய் நின்று
துயரப் படுத்தும்......!"
கவிதை மிகவும் அருமை













