வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வீர தமிழ்!
பாராண்ட தமிழ் பழந்தமிழ்! வாழ்க தமிழ்!
கனவுத் தமிழ் அதுவே ஒற்றுமையில்லா
ஓர் தமிழர் ஓங்கி ஒலிக்கும் உன்னத தமிழ்!
உடல் மண்ணுக்காம் உயிர் தமிழுக்காம்!
சொன்னவர் சொர்க்கத்தை அனுபவிக்க
கேட்டவர் ஏமாந்து கேள்விக்குறியானாரே!
தமிழீழம் அமைய உயிர் கொடுத்தார்
சிதறிய உடலை தமிழ் மண்ணுக்கும் கொடுத்தார்!
சொந்தமிழந்தார் உறவிழந்தார் எம் தமிழர்
தமிழுக்கு அவர்கள் கொடுத்தது ஏராளம்!
தமிழே நீ அவர்களுக்கு கொடுத்தது என்ன?
காட்டி கொடுத்த தமிழன்
தமிழின் பெயரில் தனம் பெற்றான்!
உயிர் கொடுத்த தமிழன்
பிச்சை எடுக்கும் நிலைமைக்கு ஆனானே!
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
காட்டி கொடுத்த தமிழன் தமிழின்
காட்டி கொடுத்த தமிழன்
தமிழின் பெயரில் தனம் பெற்றான்.........








