கனவுகளில்
உள் விழிகள் கண்ட
நிழல்களின் நிஜங்களைத் தேடிய
வாழ்க்கை பயணத்தில்
காயங்களோடு திரும்பியது
மதியும் மனமும்
கனவுகளே
விழிகளோடு கோபம்வேண்டாம்
வருகையைத் தொடருங்கள்
இறகுகளின்
காயங்கள் ஆறியபின்
சூரியனை நோக்கி
மீண்டும் பறக்கும்
பீனிக்ஸ் பறவையைப்போல்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
-இது ஒரு மீள் பதிவு (தேவைப் பட்டதால் )
http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/01/blog-post_09.html






