sentamildasan's படம்

பாப்பாபட்டி பஸ்சுக்குள்ள
பட்டணந்தான் போறபுள்ள
பஞ்சுமிட்டாய் வாங்கித்தாரேன்
கூடவுந்தான் நானும்வாரேன்
மல்லிகப்பூ வாங்கித்தாரேன்
மாமன் பெத்த வயசுப்புள்ள
தோப்புக்குள்ள யாருமில்ல
செத்தநேரம் பேசலாண்டி...

சிங்கப்பூரு செண்டுதாரேன்
நாலுகாணி நெலமும்தாரேன்
சீக்கிரமா சொல்லிப்புடு
உன்னோட சம்மதத்த
பிரியாணி பொட்டலத்த
பிரிக்காம நானும்தாரேன்
பிரியமா நடந்துக்கிறேன்
சம்மதத்த சொல்லிப்புடு....

சிவகாசி போயிவந்து
சீனிவெடி வாங்கித்தாரேன்
சின்னப்புள்ள ராசாத்தி
மச்சான கட்டிக்கடி....

அத்தமக ரத்தினமே
அழகான சித்திரமே
கம்மாக்கர ஓரத்திலே
மாடுமேய்க்கும் நேரத்திலே
மச்சானும் வாரேன்டி
மாடுகண்ணு ஓட்டிக்கிட்டு
மசங்கும் நேரத்திலே
மல்கோவோ பிடுங்கித்தாரேன்
மச்சான் துணையிருப்பேன்
மனசுக்குள்ள என்னவச்சுக்கோடி.......

8
Your rating: None Average: 8 (8 votes)

கருத்துகள்

sugiri's படம்

பாரதி ராஜா! எங்கே இருக்கீங்க?


4

Clap

பாரதி ராஜா! எங்கே இருக்கீங்க? ஒங்க ட்ரேட் மார்க் கிராம படத்துக்கு இதோ ஒரு பாடல் தயார்.


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


yarlpavanan's படம்

ஊர் மணம் வீசும் உங்கள்


10

ஊர் மணம் வீசும்
உங்கள் படைப்பு
எல்லோர் உள்ளத்தையும் உரசுமென
நம்புகின்றேன்!
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

அருமை போறபுள்ளய


5

அருமை Clap

போறபுள்ளய கூப்பிட்டாச்சு. பிள்ள வந்துச்சா வரவில்லையா????? Smile

sentamildasan's படம்

(No subject)


Smile Smile Smile

meenavignesh's படம்

அரும்மையா... மதுரகாரனு


9

அரும்மையா...
மதுரகாரனு காட்டிடான்ல,,
இன்னும் நெறைய வேணும்யா,,
Smile Smile Smile


மீனா விக்னேஷ்


joshi2010's படம்

வணக்கம் நண்பரே,,, கிராமிய


6

வணக்கம் நண்பரே,,,

கிராமிய வாசம் தூக்குது தங்கள் கவிதையில்........ உண்மையில்..... தமிழரின் கிராமத்துக் காதல் தெரிகின்றது......
"அத்தமக ரத்தினமே
அழகான சித்திரமே
கம்மாக்கர ஓரத்திலே
மாடுமேய்க்கும் நேரத்திலே
மச்சானும் வாரேன்டி
மாடுகண்ணு ஓட்டிக்கிட்டு
மசங்கும் நேரத்திலே
மல்கோவோ பிடுங்கித்தாரேன்
மச்சான் துணையிருப்பேன்
மனசுக்குள்ள என்னவச்சுக்கோடி......."

இன்றைய நாட்களில் அத்தை / மாமன் மகளைக் கூட உரிமையோடு வாடி, போடினு சொல்ல முடிவதில்லை.......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


Flower's படம்

மதுர மதுரை தான்........


10

மதுர மதுரை தான்........ Clap Clap

samiii's படம்

அருமை நண்பரே மண்வாசனையின்


10

அருமை நண்பரே
மண்வாசனையின் மணம் மாறா கவிதை
Clap Clap


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்