சிந்திக்க சிந்திக்க பெருகும் அறிவு
நித்தம் நித்தம் அதன் நிகழ்வு
உத்தமம் இருப்பினும் அளவிற்குள்!
இல்லா பொருளை ஆழ்ந்து சிந்திக்காதே
இருக்கும் பொருளை அலட்சியம் செய்யாதே
கருப்பொருள் எதுவாயினும் சிந்திக்க சிறப்படைவாய்!
வருவது இலாபமோ இல்லையோ ஆராயாதே
தருவது உன்னதம் அது மறவாதே
உறக்கத்திலாழ ஏதறிவாய் நீயெனக் கூறு!
சொர்க்கம் இருக்கு உன்னருகில் பார்
நரகமும் அது போலே உன்னருகில்
இவ்விரண்டும் உன் செயலால் மேம்படுமே!
பிறப்பதும் இறப்பதும் ஒருமுறையே
இடைப்பட்ட நேரத்தில் வாழ் வழிமுறையாய்
முனியும் ஞானியும் சொல்வதும் இதுவே!
கடவுள் என்பவர் உள்ளத்திலிருக்க காண்
மடமை செயலில் மகத்துவம் வீண்
மெய்யென அறிய மனதைத் திற!
மோதிட வலிக்கும் உணர்வாய் நீ
வாதிட அறிவாய் நல்லுலகம் நீ
கோபம் வேண்டாம் அமைதி கொள்!
அமைதி யென்பது மனதைக் காத்திட
மனது என்பது உன்னுள்ளம் அறிவது
அறிவது அறிந்தால் மனிதருக்கும் மேல் நீ!
என்றும்: சுஷ்ருவா
கருத்துகள்
அருமை.
அருமை.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தன் மனதை ஆராய்ந்து பார்ப்பவன்
தன் மனதை ஆராய்ந்து பார்ப்பவன் தன்னைத் தானே அறியும் உபாயம் பெறுவான். இறுதியில் ஞானம் பெறுவான். சிறப்பான கவிதை. சுஷ்ருவாவுக்கு வாழ்த்துக்கள்.








