rajudranjit's படம்

பொய்யே எல்லாம் பொய்யேயாகும்
நினைவை நிலையாக்கு அறிவாய் நீ
உன்னில் சிறந்தது எதுவுமில்லை மெய்!

வர்ணங்கள் பலப‌லக்க அதுவும் பொய்
ஒற்றை நிறத்தில் அவையடக்கம்
உன்னில் அடக்கம் எல்லாம் அதுபோல!

ஒலியென ஓசை ஒலிக்கும் பலவென‌
அதன் பெயர் அளவில் இசையெனவாகும்
உன்னில் ஒலிக்க அதுவொரு பேரிரைச்சல்!

காட்சியின் விரிப்பு பார்வையில் தெரியும்
பார்வையென்பது கண்ணின் ஒளியீர்ப்பே
உன்னில் அது எண்ணத்திலடக்கம் அறிவாயே!

செயலென செய்யும் ஆக்கம் பார்
உடலது ஒத்துழைக்க மனமது கட்டளையிட‌
உன்னில் உன்னை ஆளும் தன்மையதுவே!

வின்னும் மண்ணும் வெகுதூரம் காண்
மண்ணை நம்பி வின்னில்லை அறிவாய்
வின்னைப் பார்த்து ஏங்கியிருக்கும் மண்!

பிறப்பும் இறப்பும் ஒருமுறை தான்
பிறப்பறியும் நீ இறப்பறிவாயோ சொல்
உன்னில் அடக்கம் அதுவென அறிவதெப்போது?

கடவுள் இல்லை என்பது ஒருசாரர்
கடவுளை நம்பி முன்னேறும் நம்பிக்கையாளர்
உன்னில் கடவுளென்றால் நீ செய்வதென்ன?

உயிரெனப்படுவது உடலது இயங்கும் வரையே
உடலில் காற்று பயனிக்கும் வரையே நீ
உன்னிலடங்கியது நீங்கியால் அது பிணமே!

நிலையெது வெனக் கேட்டுப்பார்
யாருமறியார் விழிப்பார் சிரிப்பார் மழுப்புவார்
உன்னில் அதுவொரு பெரும் சூழ்ச்சிக்காரன்!

அடுத்தவருக்குதவ உன்னுடல் மறைய வருத்தம்
அவருடலழிந்து வாழும் சந்ததி சரித்திரம் சொல்லும்
அதிலும் நீ அடக்கம் உன்னில் அதுவொரு பெரும்மதிப்பே!

எல்லாம் பொய்யே புரிவதெப்போது
புரியும்போது உன்னை நீ அறிவாய்
உன்னை அறிந்தால் உன்னிலடக்கம் உலகம்!

என்றும்: சுஷ்ருவா

7
Your rating: None Average: 7 (3 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

எது எதிலே அடங்குமோ அது அதிலே


7

எது எதிலே அடங்குமோ அது அதிலே அடங்குமே
மனம் எதிலே அடங்குமோ, உயிர் எதிலே அடங்குமோ, பொய் எதிலே அடங்குமோ, உண்மை எதிலே அடங்குமோ என்று அடுக்கிக் கொண்டே போனால் அவரவர் உலகத்தில் அவரவர் அடங்கி விடத்தான் வேண்டும் என்பது புரியும். பெண்ணிலே தோன்றிய மனிதன் பெண்ணிலே அடங்குவதும் மண்ணிலே தோன்றிய மனிதன் மண்ணிலே அடங்குவதும் நாம் அறிந்ததுதானே. நம்மையே நாம் புரிந்து கொண்டால்.... இந்த உலகமே நம்முள் அடக்கம்தான்.

rajudranjit's படம்

நன்றி ஐயா!


நன்றி ஐயா!

yarlpavanan's படம்

"உயிரெனப்படுவது உடலது


8

"உயிரெனப்படுவது உடலது இயங்கும் வரையே
உடலில் காற்று பயனிக்கும் வரையே நீ
உன்னிலடங்கியது நீங்கினால் அது பிணமே!" என்ற
வரிகள் செப்புவது சரியே!
பிணமாகிய பின்னும் வாழலாம்
பிறருக்கு நல்லது செய்திருப்பின்...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

ஆம் அன்பரே தாங்கள் சொல்வது


ஆம் அன்பரே தாங்கள் சொல்வது உண்மையே!

"அடுத்தவருக்குதவ உன்னுடல் மறைய வருத்தம்
அவருடலழிந்து வாழும் சந்ததி சரித்திரம் சொல்லும்
அதிலும் நீ அடக்கம் உன்னில் அதுவொரு பெரும்மதிப்பே"

தாங்கள் சொல்லியதைக் குறிப்பது போல் தான் இந்தபாடல் அமைந்துள்ளது அன்பரே!

vinoth's படம்

பொய்யா மெய்யா மெய்யாலுமே


6

பொய்யா மெய்யா
மெய்யாலுமே பொய்யா
மெய்யாலுமே மெய்யா

ஒண்ணும் புரியல. ஆனா நீங்க நல்லா கவிதை எழதுறீங்க அது மட்டும் புரியுது Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

பொய்யெல்லாம் பொய்யல்ல மெய்யோ


பொய்யெல்லாம் பொய்யல்ல மெய்யோ மறைய‌
பொய்யானதே மெய் ஒளிவீச பொய் மறைத்த மெய்!

என்ன நண்பரே! சரிதானே!