syedali's படம்

உனது வருகையில்

இதுவரை கடந்துவந்த
பாலைவன நிலத்தில்
ஈன்றவர்கள்
திருமண வேலிட `
அன்பெனும் நீரூற்றி
புன்னகை விதைதூவி
பசுமையாகினாய்
ஊரைச்சுற்றிய காற்றை
உன் வருடலால்
தேன்றலக்கினாய்
நாத்திகவாதியை
உனது அன்பால்
கடவுள் பக்தனாகினாய்
கடிதம் கூட
எழுதத் தெரியாதவனை
உனது உள்ளழகால்
கவிஞனாக்கினாய்
மூடிய கரங்களை விரித்து
ஈகையினை கற்றுக்கொடுத்தாய்
உன் நகைச்சுவைகளால்
புன்னகைக்க செய்தாய்
உன் காட்சிகளில்
என் விழிகளுக்கு
வண்ணங்கள்காட்டினாய்
எழுகிற ஒலிகளை
மேல்லிசையாக்கினாய்
ஒழுங்கற்ற தினச்செயல்களை
உன் அழகிய குணங்களால்
சீரமைத்தாய்
உன்னுடனான தனிமைகளில்
உன் விரல் ஸ்பரிசத்தால்
உறங்கிக்கொண்டிருந்த
ஆண்மை உணர்வுகளை
உயித்தெழுப்பி அடிமையாகினாய்
உலகில் என்வருகைக்கான
வாழ்வியல் அர்த்தங்களை
மெய்ப்படுத்தினாய்
உனது வருகையில்
உனக்குள் தொலைத்தேன்
என்னை

6
Your rating: None Average: 6 (3 votes)

கருத்துகள்

chandru2110's படம்

நல்லாயிருக்குங்க.


7

நல்லாயிருக்குங்க.


சந்துரு


Ragavan's படம்

ரொம்ப நல்லா இருக்கு


6

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே....
வாழ்த்துக்கள்..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


vinoth's படம்

ம்ம்ம்ம்ம்ம்..... . ..


5

ம்ம்ம்ம்ம்ம்..... . ..
Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...