syedali's படம்

தோல்வி ஏமாற்றம் இயலாமை
பக்குவமற்ற மனங்களின் அவசரம்
வரமாய் கிடைத்த வாழ்கையை
அலட்சியமாக புறம்தள்ளி
அடுத்த ஜென்ம நம்பிக்கையில்
மரணத்தை முத்தமிடும் மனிதர்கள்
டல் மரணத்தில் சிதைகிறது
மனிதனின் உணர்வும் உணர்ச்சிகளும்
உடலைவிட்டு பிரியும் ஆத்மாக்கள்
தம் அடையாளத்தை துலைத்து
தனியே பிரிந்து செல்கையில்
ஜென்ம நம்பிக்கை கானலாகிறது
னித உடலில் உறங்குகின்ற
அன்பு, வெறுப்பு, கோபம்
புன்னகை, அழுகை, அமைதி
என்ற உணர்வும் உணர்ச்சிகளும்
விலங்குகளில் இருந்து வேர்பிரிக்கும்
இறைவரமான மனித அடையாளங்கள்
யிர்த்தெழும் உணர்வு உணர்ச்சிகளை
ஆளத்தெரியாத கோழை மனிதர்களின்
அவசர முடிவுகளில் சிதைகிறது
மனிதனுடனான இறைவனின் நம்பிக்கை
ணர்வையும் உணர்ச்சியையும் உட்கொண்டு  
வாழ்கையின் உன்னதத்தை சுவைக்கையில்
மனிதன்மேல் திருப்தி அடைகிறான்
அவனை படைத்த இறைவன்

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

கருத்துகள்

meena's படம்

(No subject)


5

Clap

Flower's படம்

"உணர்வையும் உணர்ச்சியையும்


10

"உணர்வையும் உணர்ச்சியையும் உட்கொண்டு
வாழ்கையின் உன்னதத்தை சுவைக்கையில்
மனிதன்மேல் திருப்தி அடைகிறான்
அவனை படைத்த இறைவன் "
Clap
வைர வரிகள்.......