rajudranjit's படம்

ஈழம் மாற்ற சிங்களர் சூழ்ச்சி
பாழாம் தமிழர் மௌனம் காத்தல்
வாழ்வது ஒருநாளாயினும் விடேல்
சரித்திரம் போக்க பௌத்தம் புகுமோ

மகத்துவம் நிறைந்த தமிழர் சான்று
அகத்தில் சூழ்ச்சி புறத்தில் வெளிப்பட‌
ஏக்கம் கொண்டு தூக்கமிழந்தோர்
ஆண்டுகள் பல போராடிக்காத்தது

சிங்களம் புகுந்து பூரிக்க விடுவதா
புறமுதுகு காட்டி ஓடவிடுவது யார்
தமிழா தமிழா தலைநிமிர்ந்து பார்
நம்மின் சரித்திரம் நலம்குலைவதோ

ஒற்றுமையின்மையே பின்னடைவு ஆனது
மீண்டும் மீண்டும் தயக்கம் ஏன்
காட்டிய வழி சிறந்தது அறிவாய்
ஓட்டுவதற்கு மௌனம் மாற்று

பழியது வாங்க தமிழனுக்குள் வீண்
ஒன்றுசேர்ந்து எதிரியை விரட்டு
கன்றின் காரணம் பசுவேயறியும்
ஒற்றுமை கொள் ஒன்றென எழும்பு

மனதில் உள்ளதை செயலெனவாக்கு
தமிழன் தலை நிமிர்தல் முக்கியம்
இன்றைய உழைப்பு நாளைய தலைமுறைக்கு
சுதந்திரம் வேண்டின் தந்திரம் செய்

சிங்களன் கால் பிடரியில் பட‌
ஓட்டம் ஓட்டம் தலைதெறிக்க ஓட்டம்
ஓட்டுவதற்கு ஒன்றென கூடி உருவெடு
வெற்றிச் சங்கை உலகறிய ஊது

வரலாறு மறைக்க வல்லூறு முயற்சி
வேடனின் மகத்துவம் வீரமென காட்டு
முன்னோர் செயலை முதன்மையாக்கு
மௌனம் என்பது காரியத்திற்குதவாது

ஈழம் தன் வரலாறு பெரிது
தமிழர் ஒற்றுமை அதனின் பெரிது
தாமதம் கொண்டால் வெற்றி அரிது
வேங்கைகள் உலவிய நாட்டில் வேதனை

மாற்றான் போதனை தேற்றாது பார்
கொற்றவன் தமிழன் கோபம் வேண்டும்
ஏய்ப்பவர் எல்லாம் சாம்பலெனவாக‌
ஈசனின் மூன்றாம்கண் திறம்படத் திற‌

ஈழம் காக்க உடனே புறப்படு
காலம் உண்டு நல்லகாலமிதுவே
அருமையறியா அற்பர் சொல்லேமாற்றம்
புலிகள் மறைய எலிகளா நாம்

பொய்யா புலமை புலம்புவது கேள்
மெய்யாய் ஆகும் ஆகுதி கொள்
ஓடிஒழிவது ஓடி மறைந்துவிட்டது
இடியென ஒலியுடன் புயலென புகு

புல்லர் பொய்மை மண்னெனவாக‌
நல்லோர் தமிழர் வெற்றியெனவாக‌
ஈழம் காக்க ஆழிக்காற்றாய் புறப்படு
வெற்றி வெற்றி வெற்றியென முரசறை

7.6
Your rating: None Average: 7.6 (5 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

ஒரு தலைமையின் கீழ் ஈழவர்


7

ஒரு தலைமையின் கீழ்
ஈழவர் ஒன்றுபட்டால்...
உலகில் தமிழர் வாழும்
நாடுகளில் உள்ளோர்
கூக்கூரல் இட்டால்...
ஐக்கிய நாடுகள் சபை
பார்த்தும் கேட்டும்
இலங்கை அரசுக்கு
அழுத்தம் கொடுத்தால்...
ஈழத் தமிழருக்கு விடிவு கிட்டலாம்...
ஆனால்,
இன்னும் இதுவரை இதுபற்றி
எவரும் முடிவு எடுத்ததாய்
தகவல் இல்லையே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

ஒற்றுமையின்மையே காரணம், ஒரு


ஒற்றுமையின்மையே காரணம், ஒரு சிலர் ஜால்ரா போடுவதும் பணத்திற்கு வாய்பிளக்கும் பிணமென ஆனதும் காரணமே!

vinoth's படம்

தமிழரின் தாயகம் தமிழரின்


7

தமிழரின் தாயகம்
தமிழரின் தாகம்
தமிழீழம்
Crying


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

நண்பரே தங்களது விமர்சனத்தை


நண்பரே தங்களது விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொள்வது?

vinoth's படம்

கூறிய கருத்து - நிஜம் அழுகை


கூறிய கருத்து - நிஜம்
அழுகை - நிஜம் இல்லாமல் போன இயலாமையின் வெளிப்பாடு


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

தங்கள் கருத்தை


தங்கள் கருத்தை ஏற்கிறேன்
ஆனால்
அது பறி போகிறதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

உலகில் பலநாடுக‌ளின்


உலகில் பலநாடுக‌ளின் சுதந்திரப்போராட்டங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது அவை அந்த நாட்டை மட்டும் சம்பந்தப்பட்டிருக்கும், ஈழச் சுதந்திரம் அப்படியல்ல அது சில நாட்டின் அதிகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்தியுள்ளது

ஆத‌னால் ஈழப்போர் மிகவும் வித்தியாசமான சுதந்திரப் போராட்டம், உலக நாடுகள் ஆச்சரியத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஈழத் தமிழ் நாட்டின் சுதந்திரம் மற்றவைகளைக் காட்டிலும் விசித்திரமாகத் தான் அமையும், பொருத்தார் உலகாள்வார் என்பது ஈழம் மெய்ப்பிக்கும்,

இருப்பினும் எம் தமிழர் திண்ணைப் பேச்சுடன் இருப்பின் வெறும்கையால் முழம் போட்டக் கதையாகிவிடும், எனவே சுதந்திரத்திற்கு பின் அடித்துக் கொள்ளுங்கள் அதுவரை ஒற்றுமையைக் கடைப்பிடித்து ஈழச்சுதந்திரத்திற்கு பாடுபட உழைப்பது அவர்களது தலைமுறை வாரிசுகளுக்கு மகத்துவம் உண்டாக்கும் என்பதை அரசியல் செய்வோர் முதலில் உணர்த்த வேண்டும்!

m.vijiyalakshmi's படம்

ஈழம் வெற்றி நிச்சியம் காலம்


7

ஈழம் வெற்றி நிச்சியம் காலம் வரும் வரை காத்திருப்போம் தோல்வி அல்ல நமக்கு இளைப்பாருவது வெற்றி பெறவே Clap


vijayalakshmi


rajudranjit's படம்

காலம் வரும் வரை என்பதைக்


காலம் வரும் வரை என்பதைக் காட்டிலும் நமது பணி என்ன நாம் அதற்காக என்ன செய்கின்றோம் என்பதே முக்கியம், உழைத்தவர்கள்,உழைத்துக் கொண்டிருப்பவர்கள் இவர்களுடன் காத்திருப்போரும் இணைந்து கொண்டால் வெகுவிரைவில் தனித் தமிழீழம் குறிப்பிட்ட நாளில் கிடைத்துவிடுமே, அதற்கு நாமெல்லோரும் தமிழர் என்ற ஒற்றுமை வேண்டும் அதைத் தான் காத்திருப்போரென நான் சொன்னேன்!

joshi2010's படம்

வணக்கம் நண்பரே, மிகவும்


7

வணக்கம் நண்பரே,

மிகவும் அருமையான கவிதை.....
"ஈழம் தன் வரலாறு பெரிது
தமிழர் ஒற்றுமை அதனின் பெரிது
தாமதம் கொண்டால் வெற்றி அரிது
வேங்கைகள் உலவிய நாட்டில் வேதனை"

தமிழினத்திற்கு எப்போதும் ஒரே குறை தான்... அது ஒற்றுமையின்மைத் தான்..... " தமிழீழம்" என்ற ஒரே இலட்சியத்திற்காய் தமிழர்கள் அணைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைந்தால்... நிச்சயம் உலக நாடுகள் சிங்கள அரசிடம் இருந்து " தமிழீழத்தை" பெற்றுத் தரும்...
நண்பர் சொன்னது போல் ("ஈழச் சுதந்திரம் அப்படியல்ல அது சில நாட்டின் அதிகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்தியுள்ளது") இதுவும் ஒரு காரணம் ஈழச் சுதந்திரம் தள்ளிப் போவதற்கு........

மேலும் இனியும் புலிகள் மேல் மட்டும் பொறுப்பை ஏற்றாமல் ( புலிகளின் தாகம் தமிழீழம்) எல்லா உலகின்
அணைத்து இடத்திலுள்ள தமிழரும் ஒருமித்த குரலில் " " தமிழரின் தாகம் தமிழீழம்" என்றுச் சொன்னால் நம்மில் உள்ள புல்லுருவிகளும், தமிழினத்தைச் சொல்லி அரசியல் நடத்தும் கட்சிகளும் இருக்குமிடம் தெரியாது நம்மை விட்டு மறையும்.........

இலங்கையில் தமிழர்கள் என்று சுதந்திரக் காற்றை சுவாஷிக்கின்றார்களோ அன்றுத் தான் ஒவ்வொரு தமிழனும் " நான் தமிழன்" என்று சொல்வதில் பெருமை..... இன்னும் பழைய வரலாற்றை மட்டும் சொல்லிக் காலம் கடத்துவதில் ஒரு பயனுமில்லை..........


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


rajudranjit's படம்

நன்றி நண்பரே! எம்தமிழ்


நன்றி நண்பரே! எம்தமிழ் மக்களின் ஒற்றுமையே ஈழத்தின் வெற்றி நண்பரே!