Selvakumarnew's படம்

(இது பனிதுளி சங்கரின் கவிதை) கொன்று குவித்தது
உடல்களை மட்டும் இல்லை
தமிழனின் உணர்வுகளையும்தான் .!

உடல்கள் இல்லை என்ற போதும்
இன்னும் சிறைப் பிடிக்கப்பட்டுதான் கிடக்கிறது
தமிழனின் சுவாசங்கள் அந்த
முள்வேலி முகாம்களில்தோட்டாக்களின் சத்தங்களும்,
தமிழனின் கதறல்களும் மட்டுமே
இன்னும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது
நிசப்த இரவுகளிலெல்லாம்
தனிமை என்ற பெயரில் .!

இரவுகள் கடக்கும் நேரத்தில் எல்லாம்
சிறகுகளில் சிலுவைகள் சுமக்கிறது
உள்ளம் .!

தூரத்துப் பெண்ணொருத்தியின்
கதறல் சத்தம் .
அழுது அழுது வறண்டு போன
கண்களிலும் மீண்டும்
ஊற்றெடுக்கும் கண்ணீர் !

இறந்த உடலென்று உணராத
குழந்தையொன்று அங்கு

அழுகை நிறுத்தி கொங்கைகளை
சவைந்துகொண்டிருக்கிறது .

காக்கைக்கும் , கழுகுக்கும்
பங்காளி சண்டை
இறந்த தமிழனை யார் முதலில்
ருசிப்பது என்று .

எஞ்சியதை இழுத்து செல்ல
எதிர்பார்புகளை எல்லைகளில்
நிறுத்தி காத்திருக்கும்
ஓநாய் ஒன்று .

இவர்களின் உயிர்களை எல்லாம்
குடித்து முடித்த மகிழ்ச்சி களைப்பில்
ஓய்வெடுக்கும் எதிரியின் துப்பாக்கிகள் . என
ஒவ்வொன்றாய் பார்த்து ரசித்த இரவொன்று
இறந்துபோனது பகலை பிரசவித்த
சில நொடிகளில் !!!!....>>>பனித்துளி சங்கர்<<<

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

கவிதையில் வேகம் அதிகம்!


4

கவிதையில் வேகம் அதிகம்!

arun_v76's படம்

தூரத்துப்


10

தூரத்துப் பெண்ணொருத்தியின்
கதறல் சத்தம் .
அழுது அழுது வறண்டு போன
கண்களிலும் மீண்டும்
ஊற்றெடுக்கும் கண்ணீர் !

இறந்த உடலென்று உணராத
குழந்தையொன்று அங்கு
அழுகை நிறுத்தி கொங்கைகளை
சுவைந்துகொண்டிருக்கிறது Angry Crying .

arun_v76's படம்

தூரத்துப்


10

தூரத்துப் பெண்ணொருத்தியின்
கதறல் சத்தம் .
அழுது அழுது வறண்டு போன
கண்களிலும் மீண்டும்
ஊற்றெடுக்கும் கண்ணீர் !

இறந்த உடலென்று உணராத
குழந்தையொன்று அங்கு
அழுகை நிறுத்தி கொங்கைகளை
சுவைந்துகொண்டிருக்கிறது Angry Crying .

joshi2010's படம்

வணக்கம்..... காக்கைக்கும் ,


6

வணக்கம்.....

காக்கைக்கும் , கழுகுக்கும்
பங்காளி சண்டை
இறந்த தமிழனை யார் முதலில்
ருசிப்பது என்று .

எஞ்சியதை இழுத்து செல்ல
எதிர்பார்புகளை எல்லைகளில்
நிறுத்தி காத்திருக்கும்
ஓநாய் ஒன்று................

உண்மைத் தான்.....போரில் எம் தமிழினம் கொத்து கொத்தாய்மாண்ட போதும், காயமடைந்து கிடந்தோரை கணரக வாகணம் மூலம் ஏற்றிக் கொன்ற போதும் கண்டுக் கொள்ளாத சமூகம்.... ........ பிணங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு சவப் பெட்டி அனுப்புகின்றது................ ஓநாய் போன்று Cry


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com