இல்லம் என்பது வெல்லம்
அதுவொரு இனிமையே
சுவைப்பவரறிவார்!
தன் மனம் ஒன்றிய துணை
மனைவியென இணந்து செயல்பட
இல்லம் வெல்லும் புகழ்!
மக்கள் செல்வம் மதிப்பறிய
மகிழ்ச்சியென பொங்கும் குதூகலம்
ஈடில்லை இல்லத்தின் வாழ்வு!
உற்றம் சுற்றம் உறவுகள்
குற்றம் காணா குணங்களிருந்தால்
உலகிலின்பம் அதுவொரு சுகம்!
அண்ணன் தம்பி அன்புடன்
அரவணைத்துச் செல்ல வாழ்க்கை
அசைக்கயியலா மலையெனவாகும்!
நண்பன் என்போன் நல்மனம்
கொண்டவனாயின் தோல்வியென்பது
தோற்றுப்போகும்!
பொருளதில்லா வாழ்க்கை வேண்டின்
இவ்வுலகம் மதிப்பளிக்காதேவென எண்ணாதே
உண்மை உழைப்பில் அது மறைந்திருக்க........
இருப்பதை வைத்து வாழ நினை
வேண்டும் வேண்டுமென்றால் வினையே
போதுமென்ற மனதே வெல்லும்!
இறைவனை வணங்குவோர் உலகில்
உனையேன் வணங்க வருகின்றார்
அவ்விடம் கொடுக்கும் அரிய உதவி!
இல்லம் சிறக்க நாடு செழிக்கும்
நாடு செழிப்பின் இல்லம் மேன்மை
ஒன்றைச் சார்ந்து ஒன்று!
இல்லம் நன்று அதனில் கவனம்
இல்லம் வெல்ல அருகதை பெறுவீர்
ஒற்றுமை பொருத்தல் இல்லத்தின் சிறப்பு!
ஆணும் பெண்ணும் வேற்றுமையின்றி
அவரவர் கடமையாற்ற இல்லம் கோவில்
கோவிலென்பது வணக்கத்திற்குறியதே அறிவீர்!
என்றும்: சுஷ்ருவா!
கருத்துகள்
"இல்லம் சிறக்க நாடு
"இல்லம் சிறக்க நாடு செழிக்கும்
நாடு செழிப்பின் இல்லம் மேன்மை
ஒன்றைச் சார்ந்து ஒன்று!" என்ற
வரிகள் சிறந்த வழிகாட்டலே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
ஆணும் பெண்ணும்
ஆணும் பெண்ணும் வேற்றுமையின்றி
அவரவர் கடமையாற்ற இல்லம் கோவில்...
மிகச் சரியான கருத்து. இல்லறத்தில் ஈடுபட்டோர் நினைவில் வைக்கவேண்டிய கருத்து. அதிலும் புதிதாக திருமணம் ஆனவர்கள் விட்டுக் கொடுக்கும் பண்பினைக் கடைப்பிடித்து பழகி வந்தால் இல்லம் என்பது கோவிலாகும்.. இதை யாராலும் மறுக்க முடியாது.
சுஷ்ருவாவுக்கு எனது பாராட்டுக்கள்.







