BaluGuruswamy's படம்

"இறைநெறி"

விற்பனைக்காக
சந்தையில் குவிந்த
சரக்குகளே போல்,
சொற்பவிலையில்,
அளவிலாத தீமையும்,
அவ்வப்போது அத்தி பூத்தாற்போல்
ஒருசில நல்லவையும்,
சிந்தையின் பரப்பெல்லாம்
நிரப்பிக்கொண்டிருகின்றன.
தீமையோ,
துரித வேகத்தில்
துடிப்புடன் காரியமாற்றின.
நற்றவம் புரிவதேபோல்,
நல்லவையோ, நாட்கணக்கில்,
ஒன்றும் செய்யாமல்
ஓரத்தில் இருந்தன.
"இறைநெறி" என்ற ஒன்றை
இவற்றின் இடையே கொணர்ந்தேன்.
என்ன விந்தை!
"அல்லவை" ஓய்ந்து விட்டன!
அனைத்தும் மாய்ந்து விட்டன;
"நல்லவை" கிளர்ந்து விட்டன.
நன்மை யாவும் மலர்ந்து விட்டன.

பாலு குருசுவாமி.

5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

(No subject)


6

Clap Clap Clap Clap Clap

Ponvannan's படம்

"இறைநெறி" என்றுமே நன்மை


6

"இறைநெறி" என்றுமே நன்மை பயக்கும். தீமை இறுதியில் அழிந்தே போகும். உள்ளத்தைக் கோவிலாக்கிக் கொண்டால் இறைவன் விரும்பி வந்து குடிபுகுவான். "நல்லவை" யாவும் மலரும். "அல்லவை" யாவும் மாயும்.
நல்ல கவிதை பாலு குருசுவாமி அவர்களே. வாழ்த்துகிறேன்.

vinoth's படம்

அருமை இறைஅன்பு நல்லவைகளை


5

அருமை

இறைஅன்பு நல்லவைகளை காக்கும்
Innocent


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...