dharshi's படம்

புலரும் காலைப் பொழுதினிலே
புதிதாய் ஒன்றும் காணவில்லை
உலரும் ஈரத்துணிபோலே
உலகில் மனிதன் பிறப்பதுவும்;
நிலையம் மாறா தொன்றாகி
நிதமும் அல்லல் படுகின்றான்,
தொலைந்து போனதம் வாழ்வதனை
தொடர நினைத்தே அழுகின்றான்.

நெஞ்சில் துளியும் துணிவில்லை
நினைப்பது ஒன்றும் நடவாதே
அஞ்சி அடங்கி போவதனால்
ஆசைக்கு எதுவும் வேலையில்லை
பஞ்சு இத்துப் பறப்பது போல்
பாவிகள் மனமும் மோதுண்டு
மஞ்சள் நிலவும் நிறம்மாறி
மனத்தைக் குடைந்து கவி பாடும்.

பிறக்கும் போது மனிதரிலே
பிறப்பால் வந்த செல்வமெது?
இறக்கும் போது மனிதரிலே
எடுத்துச் சென்ற செல்வமெது?
இம்மைச் சுகத்தில் முதுமை வரை
இறுதி வரைக்கும் போராட்டம்,
இருக்கும் வரைக்கும் இப்பாரில்
இறைவனைத் தொழுது கையேந்து..!

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"

என்றென்றும் நட்புடன்,
dharshi.

8.16667
Your rating: None Average: 8.2 (6 votes)

கருத்துகள்

chandru2110's படம்

இம்மை சுகத்துக்காக ... நல்ல


இம்மை சுகத்துக்காக ... நல்ல வ‌ரிகள்


சந்துரு


dharshi's படம்

நன்றி சந்துரு


நன்றி சந்துரு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


joshi2010's படம்

அருமையான கருத்துள்ள


அருமையான கருத்துள்ள வரிகள்....
"பிறக்கும் போது மனிதரிலே
பிறப்பால் வந்த செல்வமெது?
இறக்கும் போது மனிதரிலே
எடுத்துச் சென்ற செல்வமெது?"

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தோழி


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


dharshi's படம்

மிக்க நன்றி தோழா


மிக்க நன்றி தோழா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

இறக்கும் போது


இறக்கும் போது மனிதரிலே
எடுத்துச் சென்ற செல்வமெது?
இம்மைச் சுகத்தில் முதுமை வரை
இறுதி வரைக்கும் போராட்டம்,

மிக அருமையான வரிகள்.
Clap


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

மிக்க நன்றி தோழி


மிக்க நன்றி தோழி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


hrpsharma's படம்

மஞ்சள் நிலவும்


மஞ்சள் நிலவும் நிறம்மாறி
மனத்தைக் குடைந்து கவி பாடும்
புரியவில்லை தோழி


H.Rampradeep


dharshi's படம்

இந்த இரு வரிகளுக்கும் மேலே


இந்த இரு வரிகளுக்கும் மேலே உள்ள வரிகளையும் சேர்த்து படியுங்க புரியும்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


nandhalala's படம்

Dharshi,u Proved again....


Dharshi,u Proved again.... Smile


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


dharshi's படம்

தோழா கவிதை மட்டும் தான்


தோழா கவிதை மட்டும் தான் தமிழ்ல எழுதுவிங்களா? கருத்து ஆங்கிலத்திலா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

ஆகா..!! என்ன


ஆகா..!! என்ன வரிகள்..!!
ஒவ்வொரு வரியும் முத்துமாலை..!!
அருமை தோழி..!!


annaa


dharshi's படம்

மிக்க நன்றி தோழா


மிக்க நன்றி தோழா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vanithaselvam1212's படம்

அருமை தோழி..!!


அருமை தோழி..!!


அனிதா,BGDCA


dharshi's படம்

மிக்க நன்றி தோழி


மிக்க நன்றி தோழி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


paramaswari's படம்

அருமை டர்ஷி அருமை!


அருமை டர்ஷி அருமை!

dharshi's படம்

மிக்க நன்றிங்க


மிக்க நன்றிங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


VISWAM's படம்

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.


நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

dharshi's படம்

மிக்க நன்றிங்க


மிக்க நன்றிங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


gnanam02's படம்

அருமையான வரிகள்


அருமையான வரிகள்

dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


prakashthangavelu's படம்

மிக அருமை! நீங்கள்


மிக அருமை! நீங்கள் படித்துக்கொண்டு இருப்பாதாக பார்த்தேன். படித்துக் கொண்டே இவ்வளவு படைப்புகளுக்கும் எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் என்றுத் தெரியவில்லை. தமிழ் நண்பர்கள் வலைதள‌த்தைப் பார்ப்பதற்கே எனக்கு ஒரு மணி நேரம் ஓடி விடுகிறது. அதுவும் உங்கள் படைப்புகளை பார்ப்பதற்கு ஒரு வருடம் போதாது போல‌. நீங்கள் என்ன படித்துகொண்டிருக்கிறீர்கள் என்றுத் தெரிந்துக் கொள்ளலாமா?

dharshi's படம்

. என்னோட படிப்ப பற்றி


.

என்னோட படிப்ப பற்றி வெளிப்படையா சொல்லணும் என்று நினைத்திருந்தால் என்னோட profile ல சொல்லி இருப்பனே...

நான் படித்து முடிந்ததும் என்ன படித்தேன் என்று எல்லோருக்கும் சொல்வேன் அதுவரை வேண்டாமே..

மிக்க நன்றி..


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


prakashthangavelu's படம்

மண்ணிக்கவும், உங்கள்


மண்ணிக்கவும், உங்கள் படைப்புகளைப் பார்க்கும் போது, நீங்கள் தமிழ் இலக்கியம் படிப்பவர் போல் தெரிந்தது. இங்கு பெரும்பாலும் தகவல் தொழில் நுட்பம் சம்பந்தமான படிப்பைப் படித்தவர்கள் மட்டுமே கணினி, இணையத்தளம், மின்னஞ்சல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். முக்கியமாக தமிழ் இலக்கியம் பயின்றவர்கள் கணினி அவர்களுக்கு தேவையில்லை என்றே கருதுகின்றனர். ஒருவேளை நீங்கள் தமிழ் இலக்கியம் படிப்பவராக‌ இருந்தால், நீங்கள் இணையத்தளத்தைப் பயன்படுத்தும் அழகை அவர்களுக்குச் சான்றாகக் கூறி கணினிப் பற்றிய ஆர்வத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன்.

நீங்கள் ஏதோக் காரணத்தோடுதான் உங்கள் படிப்பைப் பற்றி சொல்லவில்லை. பரவாயில்லை! காத்திருக்கிறோம் உங்கள் படிப்பு முடியும் வரை! நன்றி...!


என்றும் நட்புடன்,
பிரகாஷ் தங்க‌வேலு.

dharshi's படம்

// நீங்கள் தமிழ் இலக்கியம்


// நீங்கள் தமிழ் இலக்கியம் படிப்பவர் போல் தெரிந்தது.//

நான் தற்போது படிக்கும் பாடத்திற்கும் தமிழ் இலக்கித்தியற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

"என் படிப்பு பற்றிய விவாதத்தை விட என் படைப்புகள் விவாதிக்கபடுவதை விரும்புகிறேன்.உங்கள் பாராட்டுக்கு நன்றி”


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


subbush's படம்

பாராட்டுக்கள்...


பாராட்டுக்கள்...


சுப்புஷ்
நன்றே செய்க அதை இப்பவே செய்க...


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/