நீ வந்து செல்வது என்
இரு இமைகளை இணைப்பதற்கு என
நினைத்து இருந்தேன்; இல்லை
என்று இன்று உணர்கிறேன் …
என் காதலன் உறங்கும் வேளை …
சூரியன் ஓய்வு எடுப்பது போல…என்
காதலும் ஓய்வு எடுக்கிறதே …
இரவே விடிவை நாடாயோ …?
கவிதைகளை தோன்ற வைக்கும் பொழுது
நீயாய் இருந்தாலும்…
அவன் பிரிவினை தாண்டி
உண்னை ரசித்திட கசக்குதடி…………..
வானத்தில் சக்கரமாய் சுற்றும் நிலவினை விட..
உலகை மறந்த உன் தூக்கம் …என்
கண்களின் ஓர் அழகிய சித்திரம் …!
கோடி நட்சத்திரத்தினை காவல் என
வைத்து கண்விழிக்கும் நிலவைப் போல…
உன் நினைவுகளை மட்டுமே காவல் என
வைத்து விழிகிறேனடா …
உன் அழகினை ரசிக்க..!
நிலவோடு விழித்திருந்தும் …
நிறையாத கவிதை கூடம்.. உன்னைக்
காணக் காண வழிந்து நிரம்புதடா காகிதத்தில் ஓடம் …!
இவள் இரவின் ரசிகையாக இருந்தாலும்…
நம்மை பிரித்திடும் எதிரியாக நிக்கிறதே கண் முன் –
இரவு-
என்றும் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் இரவு ..
உனக்காக என்னை கொடுத்திட வேண்டும் இரவு…
உன்னோடு கழியாத பொழுதாய் வேண்டும் இரவு…!
நம்மை நமக்குள் இழந்திட வேண்டும் இரவு …
நம் எதிரியாய் அல்ல ..
நம் காதல் தூதுவனாய் வேண்டும் இரவு..!
உண்னை ஐக்கியமாய் வைத்து பெற்று
எடுத்தது இரவு இக் கவிதையை …
மீண்டும்.. விடியல் கடந்து பிறக்கும் இரவோடு..
பிறக்கட்டும் உனக்காய் என் இரண்டாம் கவிதை …!
உன் கனவின் நாயகி
<3
கருத்துகள்
எங்கேயோ மாட்டிகிட்டு இருக்கே
எங்கேயோ மாட்டிகிட்டு இருக்கே போல.... 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நான் நம்பிட்டேன்...
நான் நம்பிட்டேன்...

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
கோடி நட்சத்திரத்தினை காவல்
கோடி நட்சத்திரத்தினை காவல் என
வைத்து கண்விழிக்கும் நிலவைப் போல…
உன் நினைவுகளை மட்டுமே காவல் என
வைத்து விழிகிறேனடா …///
அருமை.. வாழ்த்துக்கள் 
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி








